பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 - பாண்டி நாட்டுத் திருப்பதிகள் "அரவத் தமனியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிங்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரல்வத் திரைபல மோதப் [அமளி-படுக்கை; அரவிந்தப் பாவை-பெரிய பிராட் டியார்; அகம்படி-உள்ள மாகிய இடம்; பரவை-திருப்பாற் கடல்; திரை-அலை.} பணிக்கடலிற் பள்ளிக்கோளைப் பழசுவிட்டு ஓடிவக்தெல் மனக்கடலில் வாழவல்ல |பனிக்கடல்-குளிர்ந்த திருப்பாற்கடல்; பள்ளிகோள்பள்ளிகொள்ளுதலை; பழகவிட்டு-பழகியதாக விட்டு மறந்து என்ற பாசுரங்களில் கூறி மகிழ்வதை எண்ணி நாமும் மகிழ்கின்றோம். இவர்கள் பெற்றோர் 'விஷ்ணு சித்தன்' என்று திருநாமம் இட்ட பொருத்தத்தையும் கண்டு வியக் கின்றோம். இவ்வளவு தாயன்புடன் திகழும் விஷ்ணு சித்தருக்கு மக்கள் செல்வம் வாய்க்கவில்லை. அக்குறை எம்பெருமான் திருவருளால் நீங்குவதையும் நினைக்கின்றோம். ஒருநாள் ஆழ்வார் நந்தவனத்தில் உலவும் பொழுது திருத் துழாய்ச் செடியருகில் அழகெலாம் திரண்டு வந்தாற். போன்ற ஒரு பெண் குழவி கிடப்பதைக் காண்கின்றார்: பூமிப் பிராட்டியாரின் அம்சமான அதனை எடுத்து வந்து தன் துணைவியான விரஜையிடம் தருகின்றார். குழந்தைக் 17 பெரியாழ். திரு. 5 2:10 18 , ഒു 5.4:16