பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லிபுத்துர்வேயர் பயந்த விளக்கு 123 குக் கோதை எனத் திருநாமம் சூட்டி அன்புடன் வளர்க் கின்றனர் தாய் தந்தையர். நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக வளர்ந்த கோதையார் கல்வியும் பெறுகின்றார். சில ஆண்டுகளில் எல்லாக் கலைகளும் நிரம்பப் பெறுகின்றார். தம் தந்தையாரும் ஏனைய திருமாலடியார்களும் பாசுரங்களைப் பாடி இறைவனை க் துதித்தலையும் தம்மையே மறந்து இறையன் பில் மூழ்கித் திளைத்தலையும் இளமை தொட்டே கண்ணுற்றிருந்த கோதையாருக்கு அப்பழக்கமே பண்பாக அமைகின்றது. கோதையாரும் சொல் நயம் பொருள் நயம் நிறைந்த பாசுரங்களைப் பாடுவார். எம்பெருமான் லீலைகளைச் சொல்லிக் கொண்டே தம்மை அறியாமல் நடிப்பார்; கண் மூடி இருப்பார். இச் செயல்கள் யாவும் தாய்தந்தையருக்கு மகிழ்ச்சியை அளித்தன. ஒரு நாள் விஷ்ணு சித்தர் எம்பெருமானுக்கு என்று தொடுத்து வைத்திருந்த பூமாலையைக் கோதையார் எடுத்துச் சூட்டிக்கொண்டு அழகு பார்க்கின்றார். பின்னர் அம்மாலையைப் பூக் குடலையிலேயே வைத்து விடுகின்றார். அவர் சூடிக் கொடுத்த மாலையே எம்பெருமானுக்கு அணியப்படுகின்றது. இப்படியே நாட்கள் பல செல்லு கின்றன. ஒரு நாள் கோதையாரின் செயலைத் தந்தையார் பார்த்து விடுகின்றார். தம் மகளைச் சிறிது சினந்துவிட்டு அன்று எம்பெருமானுக்குப் புதிய மாலையை தயாரித்துச் சாத்துகின்றார். அன்றிரவு எம்பெருமான் விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றி ஆழ்வீர் நும் கோதை கொடுத்த மாலைகளே நாம் உகந்த மாலைகள்' என்று செப்பி மறைகின்றார். அன்று விஷ்ணு சித்தரும் மாலை களைத் தொடுத்துத் தன் அருமை மகளுக்குச் சூட்டி சுண் குளிரக் கண்டு மகிழ்கின்றார். பின்னர் அம்மாலைகளை எம்பெருமானுக்குச் சூட்டுகின்றார். வீடு திரும்பியதும் தம் மகளாரைத் தழுவி உச்சி மோந்து முத்தமிட்டு மகிழ் கின்றார். என்னை ஆண்டாள், இவளே’ என்று கூறிப்