பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லிபுத்துார்வேயர் பயந்த விளக்கு 127 சேர்த்த பெருமகனல்லவா இவர்? அந்தக் கைங்கரியத்தின் நினைவாக அரங்க மன்னார் அவரைத் தன்னருகில் லேயே வைத்துக் கொண்டார் போலும் மூலவர்கட்கு முன்னால் தங்கத்தாலான கோபால மஞ்சத்தில் உற்சவர்களாகவும் இம் மூவரும் எழுந்தருளியிருப் பதையும் காண்கின்றோம். இவர்களைச் சேவித்த பிறகு வடபத்திரசாயியின் (ஆலிலைப் பள்ளியான்) திருக் கோயிலுக்குப் போகச் சித்தமாகின்றோம். ஆண்டாள் கோயிலைவிட்டு வெளிவந்து வடகிழக்கு நோக்கி நடந்து வருங்கால் வழியில் ஆண்டாள் அவ தரித்த நந்தவனத்தையும் அங்குள்ள கோயிலில் சிலை வடிவத்திலுள்ள ஆண்டாளின் தனி உருவத்தையும் காண்கின்றோம். அந்த அன்னையாரையும் சேவித்து வடக்கு நோக்கி நடந்து ஆலிலைப் பள்ளியானின் ஆலயத்தை அடைகின்றோம். கோயிலின் வாயிலைப் பெரியதொரு கோபுரம் அணி செய்கின்றது இவ்வளவு உயரமான கோபுரம் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப் பெறுகின்றது. இதனைக் கேட்குங்கால் திருவண்ணாமலையின் மிகப் பெரிய கோபுரம் நம் நினை வுக்கு வருகின்றது. இக் கோபுர வாயிலை அடுத்து வட புறம் தெற்கு நோக்கிய வண்ணம் இருக்கும் பெரியாழ் வார் சந்நிதியைக் காண்கின்றோம். பெரியாழ்வார் தோன்றிய இடமாதலின் அவருக்கு இங்குச் சாத்து முறை மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. பெரியாழ்வார் சந்நிதியை அடுத்து மேற்குப் புறமாக உள்ளது ஆலிலைப் பள்ளியானின் சந்நிதி யாகும். இத் திருக்கோயிலில் இரண்டு தளங்கள் உள்ளன. கீழ்த் தளத்தில் நரசிங்கப் பெருமான் சந்நிதி உள்ளது. இச் சந்நிதிக்குக் கிழக்கே வடபுறம் பன்னிரண்டு ஆழ்வார்களும் தசாவதார மூர்த்திகளும் எழுந்தருளி யுள்ளனர். தென் புறத்தில் மேல்தளத்திற்குப் போகப் படிகள் உள்ளன. அவற்றில் ஏறி மேல்தளத்திற்குச் சென்றதும்