பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் முதலில் நாம் அடைவது கோபால விலாசம்’. அதனை அடுத்து விமல ஆகிருதி விமானத்தின் கீழே உள்ள கருவறையில் வட ஆலமரத்தின் கீழ் அனந்தாழ்வான்மீது பெரிய பிராட்டியாரும் பூமிப் பிராட்டியாரும் அடிவருட ஆலிலைப் பள்ளியான் கிடந்த கோலத்தில் சேவை சாதிக் கின்றார். அவரைச் சேவிக்கின்றோம். அருணன், பிருகு முனிவர், மார்க்கண்டேயர் ஆகியோர் அவர் அருகில் இருப் பதையும் காண்கின்றோம். இங்குள்ள அர்த்த மண்டபத்தில் திருவாழி ஆழ்வான், கண்ணன், வீதியாள வருவார், வில்லிப்புத்துர் வருவார். அல்லல் தவிர்த்த பிரான் ஆகியோர் உற்சவர்களாக எழுந்தருளியுள்ளனர். வடபத்திர சாயியின் சந்நிதியே ஆதிக்கோயில் என்றும், ஆண்டாள் சந்நிதி பின்னர் எழுந்தது என்றும் அறிகின்றோம். இந்த எம்பெருமானிடம் விடைபெறுங்கால் திவ்வியகவியின் பாசுரம் நம் மனத்தில் குமிழியிடத் தொடங்குகின்றது, 'குறித்தொருவர் கொண்டாடும் கொள்கைத்தோ கோதை நிறத்தவூர் விண்டுசித்தர் நீடுர்-பிறப்பிலிபூர் தாழ்வில்லி புத்துரரென் றைவர்க்குத் தானிரந்தான் வாழ்வில்லி புத்துனர் வளம்,?? |குறித்து-நினைத்து; கொண்டாடும்-பாராட்டும்; கொள் கைத்தோ-தன்மையுடையதோ, நிறத்த-மேம்பாடு பெற்ற; பிறப்பிலி-கண்ணன், ஐவர்-பாண்டவர்கள்) என்ற பாசுரத்தை வாய்விட்டுப் பாடிக் கொண்டு விடை பெற்றுத் திரும்புகின்றோம். இந்த திவ்விய தேசத்தைப் பெரியாழ்வாரும் ஆண்டாளுமே மங்களா சாசனம் செய்துள்ளனர். இவர்கள் 22. நூற். திருப் அந்.48-48 -