பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 30 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் எம்பெருமானைப்பற்றி மங்களாசாசனம் செய்ததாக அறியக் கூடவில்லை. ஆலிலைப் பள்ளியானைச் சேவித்த பிறகு கோபால விலாசத்தில் ஓரிடத்தில் அமர்ந்து இத் திவ்விய தேசத் தைப் பற்றிய சில செய்திகளைக் கோயில் அலுவலர் ஒருவர் மூலம் அறிந்து கொள்ளுகின்றோம். ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர உற்சவம் பெரிய திருவிழா வாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. அந்த விழா நடைபெறும் பொழுது பெரிய தேரோட்டமும் நடை பெறுகின்றது. பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண உற்சவமும் மிகவும் சிறப்புடையதே. பெரியாழ்வாரும் அவர் அருமைத் திருமகளாரும் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாக ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர். ஆண்டாள் கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் முதலிய வற்றைச் சுந்தரத் தோளுடைய மாவலி வாணாதி ராயர் கட்டியதாகத் திருக்கோயிலின் தெற்குச் சுவரிலுள்ள கல் வெட்டொன்றால் அறிகின்றோம். சுந்தரத்தோளநல்லூர் என்ற சொக்கனேந்தல் கிராமத்தை இந்த இராயரே ஆண்டாள் நாச்சியாருக்கு மானியமாக விட்டிருக்கின்றார். வடபத்திரசாயியின் கோயில் ஜடாவர்மன் என்ற திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் குலசேகர தேவர் என்பவரால் கட்டப்பட்டதாகும். பாண்டிய மன்னர் கள் இரண்டு கோயில்களையும் கண்காணித்து வந்தனர் என்ற செய்தியையும் அறிகின்றோம். இராமாநுசருக்கும் இந்தக் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இராமாநுசர் இத்தலத்திற்கு எழுந்தருளிய, போது நூறு தடா அக்கார அடிசிலை மாலிருஞ்சோலை மணாளருக்குப் படைத்த தன் அண்ணா வருகின்றார் என்று ஆண்டாள் தன் அர்ச்சாவதார சமாதி கடந்து ஏழடி முன் நடந்து எதிர்கொண்டு அழைத்த செய்தியையும் அறிகின்றோம். அதுமுதல் இராமாநுசருக்குக் கோயில்