பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii இப்போது பாண்டியநாட்டு திவ்விய தேச யாத்திரை யில் யான் பெற்ற அநுபவம் பாண்டி காட்டுத் திருப்பதிகள்’ என்ற பெயருடன் நூல் வடிவம் .ெ று கின்றது. ஏனைய இரண்டு நூல்களையும் படித்த அன்பர் கள் இதனையும் அன்புடன் வரவேற்பர் என்ற நம்பிக்கை என்றும் என்பால் உண்டு. இந்த நூலிலுள்ள பதினெட்டுக் கட்டுரைகளிலும் ஆழ் வார்களின் பக்தியுணர்ச்சி, அவர்களின் இறையறுபவம், அவர்கள் அருளிய பாசுரங்களின் சொல்வளம், அவற்றில் அகப்பொருள் துறைகள் அமைந்த அருமைப்பாடு முதலிய வற்றைக் காணலாம். என் சிறிய உள்ள ம் ஆழ்வார்களின் திருப்பாசுரங்களில் ஆழங்கால்பட்ட முறையைக் கட்டுரை கள் ஒருவாறு விளக்கும். இந்நூலைப்படிப்போரின் உள்ளங் களையும் பிணித்து, அத் திருப்பாசுரங்களைச் சேவித்து அநுபவிக்கத் துாண்டும் கருவிகளாக அவை அமையுமாயின் அதனை யான் பெற்ற பெரும் பேறாகக் கருதி மகிழ்வேன். இந்த நூலிலுள்ள 3-எண்ணுள்ள கட்டுரை இராமேசு வரம் திருக்கோயில் குட முழுக்கு மலரில் (5-2-1975 ; வெளி வந்தது. அதனை வெளியிட்ட மலராசிரியருக்கு என் நன்றி என்றும் உரியது. பாண்டிநாட்டுத் திருப்பதிகளில் நவதிருப்பதிகளை விரைந்து நலமாகச் சேவிப்பதற்கு திருநெல்வேலி எஸ், ஆர் சுப்பிரமணிய பிள்ளைப் பதிப்பகத்தார் தமது சிற்றுந்தை (Watt) உதவி அருளினார்கள். இதனால் கதிரவன் கொடுமை யாகக் காயும் சூன் திங்களில் எங்கள் பாத்திரை சிரமமின் தி திறைவு பெற்றது. இந்த வசதிகள் அளித்த மேற்படி பதிப்பகத்தாருக்கும் சிறப்பாக அதன் அதிபர் திரு. S. சங்கர சுப்பிரமணிய பிள்ளை அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.