பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13? பாண்டிநாட்டுத் திருப்பதிகள் என்பது அப்பாடல். இங்ங்னம் இப்பாடல்களைச் சிந்தித்த வண்ணம் திருக்கோயிலை விட்டு வெளி வருகின்றோம். பேருந்து நிலையத்திற்கு வந்து திருத்தண்கால் செல்லும் பேருந்தில் ஏறுகின்றோம். பேருந்து கிளம்பிச் செல்லுங் கால் வில்லிபுத்துரின் பெருமையைக் கூறும், கோதை பிறக்தகர்; கோவிந்தன் வாழும் ஊர்; சோதி மணிமாடம் தோன்றும் ஊர்;-திேயால் நல்லத்தர் வாழும் ஊர்; கான்மறைகள் ஒதும் ஊர்;வில்லிபுத்துர் வேதக்கோன் ஊர்.' என்ற பாடல் நம் மிடற்றொலியாக வெளிவருகின்றது, இத்துணைச் சிறப்புடைய ஊரைத்தான் மகாபாரத ஆசிரியர் தம் பெயராக வைத்துக் கொண்டாரோ என நினைக்கவும் தோன்றுகின்றது. இல்லையா? -