பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருத்தண்காலூர் அப்பன் திருமந்திரத்திலுள்ள ஓம் எனப்படும் முதற் பதமாகிய பிரணவம் சகல வேதசாரம் என்று சொல்லப் பெறுகின்றது. 'ஓம்' என்பதில் அ, உ. ம் என்னும் மூன்று எழுத்துகள் அடங்கியுள்ளன. இம்மூன்று எழுத்து களும் மூன்று பதங்களாய், மூன்று பொருள்களைத் தெரிவிக்கும். இவை ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் நிலையில் ஒரே எழுத்தாய், ஒரே பதமாய், ஒரே பொருளைத் தெரிவிக்கும். இருக்கு, யஜூர், சாமம் ஆகிய மூன்று வேதங்களையும் துருவிப் பார்த்ததில் இருக்கு வேதத்தின் சாரமாக பூ என்பது தோன் றியது; யஜுர் வேதத்தின் சாரமாக பு: தெரிந்தது; சாம வேதத்தின் சாரமாக ஸாவ: அறியப் பெற்றது. இம் மூன்யையும் பொற்கட்டிகளாகக் கொள்ள வேண்டும். ஈசுவரன் இம் மூன்றையும் தனது சங்கற்பத்தினால் ஒன்றாகச் சேர்த்து உருக்கி ஓடவிட்டுத் தூய்மையாக்கி அதிலிருந்து முதலில் அகாரத்தையும், இரண்டாவதாக உகாரத்தையும், மூன்றாவதாக மகாரத்தையும் தோன்று, மாறு செய்தான். பகவான் இங்கனம் அடைவே வெளி பிட்டதை மனத்திற் கொண்டே பிள்ளை உலகாசிரியர், 'மூன்று தாழியிலேதயிரை கிறைத்துக் கடைந்து வெண்ணெய் திரட்டுமாப் போலே, மூன்று வேதத்திலும் மூன்று அட்சரத்தையும் எடுத்தது.' 1. முமுட்சுபடி-34 2. முமுட்சுபடி-83