பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் 'பொங்கார்மெல் இளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் நீர் அரும்பப் போக்து கிணறு செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே தண்காலும் தண் குடந்தை நகரும்பாடித் தண்கோவ ஆர்பாடி ஆடக் கேட்டு, "நங்காய்!ருங் குடிக்கிதுவோ நன்மை? என்ன, கறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே." (பொங்குஆர் - வளர்ச்சிமிக்க; பொன்-தேமல்; பொருபோரிடும்; செங்கால-சிவந்த கால்களையுடைய, புறவம். புறாக்கள்.) - என்பது பாசுரம் இதில் ஆழ்வாருக்கு நாயகி நிலை ஒரு புறமும், தாயின் நிலை மற்றொரு புறமும் நடக்கின்ற படியால் எம்பெருமானை அநுபவிப்பதில் விரைவு உண்டானமையும், 'நாம் பதறக்கூடாது' என்ற தீர்மான மும் உண்டாவதையும் காண்கின்றோம். அவனுடைய தனிச்சிறப்பை நோக்குமிடத்தில் பதற்றம் உண்டா தலையும் பார்க்கின்றோம். - - . தெய்வக் காதலால் எம்பெருமானுடன் கல்வி ஏற்பட்ட பிறகு கொங்கைகளில் பசுமை பூக்கின்றது. கண்களில் சோகக் கண்ணிர் அரும்புகின்றது. விரகத் தீயால் உள்ளுலர்ந்து நீர்ப்பசையற்றுக் கிடக்கையாலே அரும்ப' எனறு கூறும் நுட்பத்தையும் உணர்கின்றோம். நாயகனே வந்து மேல் விழவேண்டும்படியான முலையழ கையும் கண்ணழகையும் உடைய நீ அவன் மீது விழுதல் தகாது’ என்று தாய் சொன்ன அறவுரை அவள் செவியில் நாராசம்போல் புகுகின்றது. தீப்பற்றின வீட்டினின்றும் பதறிப் புறப்பட்டது போல் அத்தாய் இருந்த வீட்டினின்றும் சடக்கென வெளிவருகின்றாள் ஆழ்வார் நாயகி. பாம்புக்கு அஞ்சியோடியவன் புலியின் வாயில் விழுந்தாற் போலா 6. திரு. நெடுந் 17