பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தண்காலூர் அப்பன் 137 யிற்று அவள் நிலை. வெளியிலே வந்தவள் காதில் தாயின் சொல்லை விடக் கொடிய சொல் விழுகின்றது. ஆண் புறா வும் பெண் புறாவும் கொஞ்சும் பேச்சுகள் அவள் செவியில் விழுகின்றன. இந்நிலையில் தன்னிலை கண்டு உடலுருகு கி ைறாள். பண்டு அவனும் தானும் கலந்து பரிமாறின படிகளை நினைக்கின்றாள். இதனால் மேலும் உடலுருகு கின்றாள். ஆண் புறாவின் செங்கால்கள் நாயகனுடைய செந்தாமரை அடிகளை நினைப் பூட்டுகின்றன. புறாவின் சிறுகுரல் அவன் இரகசியமாகப் பேசும் பேச்சு கேட்கப் பெறுவது என்றோ எனக் கவன்று உடலுருகுகின்றாள். இதனால் ஆற்றாமை மீதுர்ந்த பரகால நாயகி எம் பெருமானோடு கலந்து பரிமாறுவதற்கான சில திருத் தலங்களின் திருநாமங்களை வாய்விட்டுப் பேசுகின்றாள். தண்கால், தண்குடந்தை, தண்கோவலூர் முதலான திருப்பதிகளைப் பாடத் தொடங்குகின்றாள். அங்குள்ள எம்பெருமான் குளிர்ந்த தெனறல் போலவே சிரமம் போக்குகின்ற வடிவையுடையவனாக இருக்கையினாலே அத்திருத்தலம் தண்கால் என்று திருநாமம் பெற்றது என்ற செவிவழி மரபினையும் சிந்திக்கின்றோம். பண்டு அப்பெருமான் தன்னைத் தழுவினபோது சிரமம் எல்லாம் தீர்ந்து மிக இனிமையாக இருந்ததுபோல் மீண்டும் அங்ங்னமே ஆகவேண்டும் என்று தண் காலைப் பாடுகின்றாள். திருமழிசையாழ்வாரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சியொன்று திருக்குடந்தையை நினைக்கச் செய்கின்றது. எம்பெருமான் அமுது செய்த போனகம் சேஷபூதம் உண்ண உரியது என்ற முறையிருக்க, திருக் குடந்தை ஆராவமுதப் பெருமான் தமக்கு ஆக்கின திருப்போனகத்தை முற்படத் திருமழிசைப் பிரானை அமுது செய்யப் பண்ணுவித்துப் பின்னைத் தான் அமுது செய்ததாக நிகழ்ச்சி ஒன்றுண்டு. இப்படியாக அன்பரோடு புரையறக் கலந்து பரிமாறுகின்றவன் எம்பெருமான் என்ற உட்கருத்தினைக் குறிப்பிடுவாள் போலத் திருக்குடந்தை யைப் பாடுகின்றாள். முதலாழ்வார்கள் மூவரும் மொழி