பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் 145 வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல் தான்விழுங்கி உய்யக்கொண்ட கொற்றப்போர் ஆழியான்குண’’’ (நால்வாய்-தொங்குகின்ற வாய்;ஒற்றைக்கை-துதிக்கை; வெண்பகடு-ஐராவதம்.) இதை நோக்கும்போதும் சீமன் நாராயணனின் பரதத் துவம் உறுதிப்படுத்துகின்றது. இந்த எண்ணங்கள் நெல்லையில் ஒரு விடுதியில் தங்கியிருக்கும் நம் மனத்திவ் குமிழியிடத் தொடங்கு கின்றன. அதிகாலையில் எழுந்து நம்மாழ்வார் அவதரித்த திருக்குருகூர் என்ற திவ்விய தேசத்தைச் சேவிக்கச் சித்தமாகின்றோம். தண்பொருநை ஆற்றின் இருகரை களிலும் அடுத்தடுத்து ஒன்பது திவ்விய தேசங்கள் உள்ளன. இவற்றை நவ திருப்பதி’ என வழங்குவர். அவற்றுள் பொருநை யாற்றின் தென்கரையிலிருப்பவை திருக்குருகூர், திருக்கோளுர், தென்திருப்பேரை என்ற மூன்றுமாகும். மற்றவை நீ வைகுண்டம், நத்தம் என வழங்கப்பெறும் வரகுணமங்கை, திருக்குளந்தை, திருப் புளிங்குடி, தொலைவிலி மங்கலம் (இரட்டைத் திருப்பதி) ஆகிய ஆறும் ஆகும். இவை பொருநையாற்றின் வட கரையிலுள்ளன். இந்த நவதிருப்பதிகளையும் நம்மாழ் வார் மங்களாசாசனம் செய்துள்ளார். இவை யாவும் திருக்குருகூரைச் சுற்றியே அமைந்துள்ளன. முதல். திருப்பதிதான் திருக்குருகூர்.இது நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் சுமார் 22 கல் தொலைவிலுள்ளது. நம்மாழ்வார் திருவவதரித்த காரணத்தாலேயே, இத் திருப்பதி ஆழ்வார் திருநகரி' என்ற பெயரையும் பெற்றுத் திகழ்கின்றது. இந்த ஆழ்வார் திருகரி நெல்லை - திருச்செந்தூர் இருப்பூர்தி வழியிலுயிள்ள ஓர் இருப்பூர்தி நிலையம். இந்த நிலையத்தினின்றும் ஒருகல் தொலைவி லுள்ளது. இத்திவ்விய தேசம். ஆகவே நெல்லையிலிலிருந்து 3. பெரி. திரு 11.6:8 பா. தி-10