பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் 147 திருவாக்குகளைச் சிந்திக்கின்றோம். பொதுவாக ஊரையோ ஊர்ச் சுற்றுப் புறத்தையோ கவிஞர்கள் வருணிப்பதுபோல் அந்த ஊர் நேரில் பார்ப்பவர்கட்குத் தோன்றுவதில்லை; அந்த ஊரைப் பார்க்காமல் இருக்கும்பொழுது அவ்வூரைப் பற்றி நம் மனத்தில் எழும் மானதக் காட்சிகள் அவ்வூரை நாம் பார்க்கும்போது ஓரளவுதான் பொருந்தும். இது இலக்கியச் சுவைஞர்களின் அநுபவமாகும். ஊரருகிலுள்ள சாலையை அடுத்தே திருக்கோயில் உள்ளது. புகை வண்டியில் சென்றாலும், பேருந்தில் சென்றாலும் நாம் முதலில் ஆதிநாதர் சந்நிதியைத் தான் வந்தடைகின்றோம். திருக்குருகூர் என்பதன் காரணத்தை அறிய நாம் ஆவல் கொள்ளுகின்றோம். புராணக் கண் திறக்கின்றது. ஒருநாள் நான்முகன் நாராயணனை வணங்குவதற்காக வைகுந்தம் செல்லு கின்றார். நாராயணன் நான்முகனை நோக்கி * அன்பனே, உன்னைத் தோற்றுவிப்பதற்கு முன்னரே தண்பொருநையாற்றின் கரையில் ஒர் இடத்தைத் தேர்ந் தெடுத்து அதனையே குடியிருப்பாகக் கொண்டுள்ளோம். அதனையே ஆதிக்கோயிலாகக் கொண்டு வழிபடுவாயாக' என்று கூறுகின்றார். நான்முகன் அந்தத் தலத்தை நோக்கி வருங்கால் தண்பொருநையாற்றில் மிதந்துவரும் வலம்புரிச் சங்கொன்று சங்கணித்துறை'யில் ஏறி அங்குள்ள ஆதிநாதரை வலம்வருவதைக் காண்கின்றார். இங்ங்ணம் திருமால் உகந்து இடங்கொண்ட இடத்தில் இருக்கும் ஆதிநாதரை வழிபட்டுச் சத்தியலோகம் திரும்புகின்றார் நான்முகன். திருமாலே குருவாக வந்து உபதேசித்த தலமாதலால் இதற்குக் குருகூர்’ என்ற பெயர் வழங்கலாயிற்று. இதனை அறிந்த வண்ணம் திருக்கோயிலை நோக்கி நடக்கின்றோம். திருக்கோயிலின் வாசலில் ஒரு தகரக் கொட்ட கையும், அதைச் சேர்ந்தாற்போல் ஒரு பெரிய மண்டப மும் நம் கண்ணில் படுகின்றன. இந்த மண்டபத்தில்தான்