பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் இராமயணக் குறடு உள்ளது. இராமாயணக் குறட்டை அடுத்து இருப்பது கோபுர வாயில். இதனை அடுத்துள்ள கொங்கணையான் குறடு. கிளிக் குறடு ஆகியவற்றைக் கடந்து கருட மண்டபத்தினை அடைகின்றோம். இதனைக் கடந்து அர்த்த மண்டபத்திற்கு வருகின்றோம். இப்படி வந்து கொண்டிருக்கும் பொழுதே இத் திருப்பதிபற்றிய நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள் நம் மனத்தில் குமிழியிடத் தொடங்குகின்றன. அர்ச்சா வதாரத்தில் எம்பெருமானின் பரத்துவத்தை மூதலிக் கின்ற வீறு பெற்ற பாசுரங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் சிந்திக்கின்றோம். ஒன்றுக் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோ டுயிர் படைத்தான் கின்ற ஆதிப்பி ரான்கிற்க மற்றைத் தெய்வம் காடுதிரே...' . என்பது முதற் பாசுரம். முதலிரண்டடிகள் எம்பெரு மானின் ஜகத் காரணத்துவத்தை மூதலிக்கின்றன. தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் ஒன்றும் இல்லா அன்று’ என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். எல்லாப் பொருள்களையும் படைத்தவனான சர்வேசுவரன், தாய் சந்நிதி ஒழியக் குழந்தை வளராதாப் போலே, தன் சந்நிதி ஒழிய இவை சீவிக்கமாட்டா என்று பார்த்துத் திருநகரியிலே எளியனாய்க் காட்சி தந்தருளா நிற்க, வேறே அடையக் கூடிய பொளுரும் உண்டு என்று தேடித் திரிகின்றீர்களே, இஃது என்ன அறிவுக் கேடு!’ என்று வேறு தெய்வங்களை நாடுவோரை நோக்கி வெறுப்புக் காட்டுகின்றார் ஆழ்வார், இங்கே 12. திருவாய் 4.10:1