பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் 149 இன்சுவைமிக்க ஈட்டுஸ்சக்தி காண்மின்: 'ஸர்வேசுவரன் சதுர்முகனை ஸ்ருஷ்டித்தான்; சதுர்முகன் பஞ்சமுகனை ஸ்ருஷ்டித்தான்; பஞ்சமுகன் ஷண்முகனை ஸ்ருஷ்டித் தான்; ஆக இதுதான் பஹுமுகமாயிற்றுக்காணும்’ மேலும் நீர் வேட்கையையுடைய ஒருவன் கங்கை பெருகியோடா நிற்க அதிலே அள்ளிக்குடித்துத் தன் விடாய் தீரமாட்டாதே, அதன் கரையிலேயே குந்தாலி கொண்டு கிணறு தோண்டித் தன் விடாய்க்கு உதவ நாக்கு நனைக்க இருக்குமாறு போலே, அடையத் தக்கவனுமாய், எளிதில் ஆராதிக்கக் கூடியவனுமாய், நல்ல சுபாவத்தையுடையவனுமான இவனை விட்டு, அடையத் தகாதவராய், அரியராய், அரிதில் ஆராதிக்க, கூடியவராய்க் கெட்ட சுபாவத்தை உடையவராய், சீலித்து ஆராதித்தாலும் பலிப்பதும் ஒன்று இன்றிக்கே இருக்கிற திருவில்லாத தேவரைத் தேடி அடைவ தற்குத் திரிகின்றீர்களே' என்ற ஈட்டின் விளக்கத் தையும் சிந்திக்கின்றோம். - இந்த எம்பெருமான் மேவி உறையும் கோயிலுக்குப் பாடியாடிப் பரவிச் செல்லுமாறு உலகினரைப் பணிக் கின்றார் அடுத்த பாசுரத்தில். நாடி நீர்வ ணங்கும் தெய்வமும் உம்மையும் முன்படைத்தான் வீடில் சீர்ப்புக ழாதிப் பிரானவன் மேவி யுறை கோயில் பாடி யாடிப் பரவிச் செல்மின்கள் பல்லுலகீர்! பரந்தே' மக்கள் வணங்கும் சிறு தெய்வங்கட்கும் மக்களுக்கும் அதிக வேறுபாடு ஒன்றும் இல்லை. மக்களைக் காட்டிலும் அவர்கட்குச் சிறிது ஞானமும் சக்தியும் ஏறியுள்ளன; அவ்வளவுதான் ஆகவே, அத்தெய்வங்களையும் மக்களை T3 திருவாய் 10:2