பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் யும் படைத்த காரண பூதனான சீமந் நாராயணன் சேவை சாதிக்கும் இடமான திருநகரியைச் சேவிக்குமாறு பணிக் கின்றார் ஆழ்வார். ஆதிப்பிரான் அவன மேவி உறைகோயில்: பரம பதத்தில் தன்னில் குறைந்தார் இல்லாமையாலே அவ் விடத்தைவிட்டு, நல்ல படுக்கையையும போகத்துக்கு. ஏகாந்தமானவற்றையும் காற்கடைகொண்டு குழந்தை யினுடைய தொட்டிற் காற்கடையிலே கிடக்கும் தாயைப் போல, காப்பாற்றுவாரை விரும்புபவர்களான சம்சாரிகள் இருக்கும் இடமாகையாலே விரும்பி வசிக்கும் இடம் இவ்விடமாயிற்று. அவன் மேவி உறை கோயில் என்ற விடத்து நம்பிள்ளை ஈடு: "அவன் பரமபதத்திலோ உள்வெதுப்போடே காணும் இருப்பது. சம்சாரிகள் படுகிற கிலேசததை அநுஸந்தித்து இவை என்படுகின்றனவோ? என்று திருவுள்ளத்தில் வெறுப்போடோயிற்று அங்கி ருப்பது...” - இக் கருத்துபற்றி ஈட்டில் வரும் ஒர் இதிகாசத்தை யும் சிந்திக்கின்றோம். பராசரபட்டர் என்பார், பரம பதத்திலும் சம்ஸாரிகள் படுகிற கிலேசத்தை யநுசந் தித்துத் திருவுள்ளத்தில் வெதுப்போடேயாயிற்று' என்று அருளிச்செய்ய, பண்டிதர் என்ற அன்பர் ஒருவர், "ஆச்சானும் பிள்ளை யாழ்வானும் இதைக் கேட்டுப் பரமபதத்திலே ஆநந்தத்தால் பூர்ணனாயிருக்கிற இருப் பிலே திருவுள்ளத்திலே ஒரு வ்யலனத்தோடேயிருந்தான் என்கை உசிதமோ? என்கின்றார்கள் என்று வந்து விண்ணப்பம் செய்ய, அதற்குப் பட்டர், மனிதர்கட்குத் துக்கம் வருகின்ற காலத்தில் தானும் (எம்பெருமானும்) மிகவும் துக்கிக்கின்றான்’ என்றது குணப்பிரகரணத் திலேயோ? தோஷப் பிரகரணத்திலேயோ? என்று கேட்க மாட்டிற்றிலிரோ? இது குணமாகில் குண மென்று பேர் பெற்றவற்றில் அங்கு இல்லாதது ஒன்று உண்டோ? என்று அருளிச் செய்தார். -