பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் 15? இதனைச் சற்று விளக்குவோம். எம்பெருமானை ஸ்மஸ்த கல்யாண குணாத் மகன்’ என்றும், உயர்வற உயர் நல முடையவன்’ என்றும் கூறுகின்றவர்கள் ஒன்றொழியாமல் எல்லாக் குணங்களும் அப்பெருமா னிடத்தே உள்ளன என்று இசைந்தே தீரவேண்டும். ஒரு குணம் இல்லை என்றாலும் அது அவனைக் குறை சொன்னதாக ஏற்படும். துக்கப்படுவதென்பது கல்யாண குண மன்று என்றும், அது தாழ்வான குணம் என்றும் கலங்குவர் சிலர். தாமாக அநுபவிக்கும் சோகம் தாழ்வானதேயன்றிப் பிறர் பொருட்டு அநுபவிக்கும் சோகம் சிறந்த குணமாகும். எம்பெருமான் தமக்காக இன்ப துன்பங்கள் இல்லாமலிருந்தும் பிநர்படும் இன்ப துன்பங்களை அநுபவிப்பதனால் தாம் இன்பதுன்பங்களை அடைந்து விகாரப்படுவர்; இந்த விகாரம் பிறரிடத்திலுள்ள அன்புபற்றியதாதலால் அவனுக்குக் குற்றமாகாது என்று பட்டர் அருளின விளக்கத்தையும் சிந்திக்கின்றோம். எம்பெருமானைக் காட்டிலும் அவன் உகந்தருளின இடமே மிகச் சிறந்தது என்ற கொள்கையின்படி ஆழ் வாரும் திருக்குரு கூரதனைப் பாடியாடிப் பரவிச் செல் மின்கள் என்கின்றார். திவ்விய தேசத்திற்குச் சென்று சேவிப்பதைவிட வழிப் போக்குத்தானே மிக இனிதா கையாலே பாடியாடிப் பரவிச் செல்மின்கள்' என்கின் றார். பரந்தே' என்பதற்கு ஈடு: "பெரிய திருநாளுக்கு எல்லாத் திக்குகளின்றும் வந்து ஏறுமாறு போன்று, பல திக்குகளினின்றும் பாடியாடிப் பரவிச் செல்லுமாறு பணிக்கின்றார். இதனையும் எண்ணி மகிழ்கின்றோம். உலகங்களைக் காப்பதற்காக எம்பெருமான் செய்து போகும் திருச் செயல்களை ஆராய்ந்து பார்த்தாலும் இவனே முழு முதற் கடவுள் என்பதும் தெளிவாகும். தேவசாதி தொடக்கமாகப் பல உலகங்களைப் படைத்த செயலும்,