பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ் வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் 155 எல்லோரும் நாராயணனைத் தொழுது வீடு பெற்று விட்டால் இந்த லீலா விபூதி அடியற்றுப் போய்விடும்; அதற்காகவே உங்களை வேறு தெய்வங்களைத் தொழுமாறு செய்து சம்சாரிகளாகத் தொலைந்து போகும்படி செய்தான் என்பதாகப் பொருள் கொள்ளும்படி செய்துவிடும். இது' எம்பெருமானுக்குக் குறையை உண்டாக்கிவிடும். திருக் குருகைப்பிரான் பிள்ளான் உள்ளிட்ட எல்லா உரையாசிரியர்களும் உலகு என்பதற்கு சாத்திர மரியாதை என்று பொருள் கொண்டுள்ளார்கள். அவரவர். கள் செய்த புண்ணிய பாவங்களுக்கேற்பப் பலன் கொடுப்பதென்று ஒரு சாத்திர மரியாதை ஏற்பட்டுள்ளது. நீங்கள் சென்ற பிறவிகளில் தீவினைகளைச் செய்திருந்த படியால் அவற்றின் பலனாக உங்களை இப்பிறப்பில் சிறுதெய்வ வழிபாட்டில் தள்ளியுள்ளான். கொடிய பாவங்கள் பண்ணின் உங்களை புண்ணியான்மாக்களைப் போலவே நாராயண வழிபாடு செய்யும்படி செய்துவிடுவதானால் அப்போது சாத்திரமரியாதை குலைந்துவிடுமல்லவா? அங்கனம் அஃது அழிந்துவிடாதிருக்கும் பொருட்டே உங்களை இங்ங்னம் நிறுத்திவைத்தான்' என்ற சரியான பொருளையும் சிந்திக்கின்றோம். அடுத்த பாசுரத்தில் அவர்கள் இந்தச் சுழலிலிருந்து. தப்பும் வழியைக் காட்டுகின்றார். 'ஓடி யோடிப் பல்பி றப்பும் பிறந்துமற் றோர் தெய்வம் பாடி யாடிப் பணிந்து பல்படி கால்வழி யேறிக்கண்டிர் ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்(கு) - அடிமை புகுவதுவே.' T 21, திருவாய்மொழிக்கு வடமொழிப் பதவுரையிட்டு ஒன்பதாயிரப்படி இயற்றிய ரீ ரங்கராமாநுஜ சுவாமி இம். பொருளையே பணித்துள்ளார். 22. திருவாய் 4, 10:?