பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重露8 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் (ஒடி ஒடி-சம்சார சாகரத்தில் ஒடியோடி, பல்படிகால் வம்சபரம்பரையாக, புள்கொடி-கருடக்கொடி; புகுவது வியங்கோள் வினைமுற்று.) இதில் கருடக் கொடியையுடைய எம்பெருமானுக்கு அடிமை புகுவதுவே அவர்கள் மேற்கொள்ள வேண்டியதாகும் என்கிறார். அடுத்து, 'புக்கடி மையினால் தன்னைக் கண்ட மார்க்கண் டேயவனை, கக்க பிரானும் அன் றுய்ப்பக் கொண்டது நாராயணனருளே.' |புக்கு-உள்புக்கு, நக்கபிரான்-திகம்பரன் (உருத்திரன்), என்று மார்க்கண்டன் வரலாற்றைக் கூறுகின்றார். யமன் மரக்கண்டனையும் இலிங்கத்தையும் தன் பாசத்தால் கட்டி இழுக்கும் பொழுது சிவபெருமான் நாராயணனைத் தியானித்து அவனது திருவருளால் இலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு யமனைக் காலாலு தைத்துத் தள்ளிமார்க்கண்ட னுக்கு என்றும் பதினாறு வயதாக வாழும்படி அநுக்கிரகித் தான் என்பது வரலாறு. இந்த மார்க்கண்டன் நெடுநாள் வாழ்ந்த பிறகு மகாப் பிரளயத்தைக் காணவேண்டும் என்று ஆசைகொண்டு எம்பெருமானைப் போற்றி வணங்கு கின்றான், அவன் அருளால் மகாப் பிரளயத்தைக் காணுங்கால் அப்பெருமானது திருவயிற்றினுள் திருமாலொருவனையன்றி மற்றைத் தேவர் எவரையும் பிழைத்திருப்பதைக் காணவில்லை. முடிவில் தான் திருமாலைச் சரணம் அடைந்து அவன் திருவடிப் பேறு பெறுகின்றான் என்பதையும் சிந்திக்கின்றோம். அடுத்து, ஆழவார் திருநகரியைச் சிந்தனை செய்யுமாறும் ஆதிப்பிரா னுக்கு அடிமை செய்யுமாறும் ஆற்றுப்படுத்துவதையும் எண்ணுகின்றோம். அர்த்த மண்டபத்திலிருந்த வண்ணம் கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக 23. திருவாய் 4. 10: 8