பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார் திருநகரி ஆதிநாதபெருமாள் 159 வாறே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி திருவாய்மொழி என்ற நான்கு பிரபந்தங்கள் வாயிலாக உலகுக்கு உணர்த்தியவர் இத்தகைய பெருமை வாய்ந்த ஆழ்வார் பிறந்த திருக்குருகூர் என்ற ஊர் பெயர் ஆழ்வார் திருநகரி என்று மாறிவிட்டதே ஆழ்வாரின் பெருமைக்குச் சான்றாகும். இந்தத் திருநகரிக்கு வந்த கவிஞர் ஒருவர் மிகப் பெருமிதம் கொள்கின்றார்; அவருக்கு எக்களிப்பே உண்டாகி விடுகின்றது. அந்த எக்களிப்பில், 'இதுவோ திருநகரி? ஈதோ பொருநை? இதுவோ பரமபதத்து எல்லை? -- இதுவோதான் வேதம் பகிர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை ஒதும் சடகோபன் ஊர்?' என்று ஒரு வெண்பாவையே பாடி விடுகின்றார். நம்மாழ்வாருக்கு முதலில் சடகோபன்’ என்ற திரு தாமம் ஏற்பட்டதன் காரணத்தையும் எண்ணுகின்ன்ோம். அன்னையின் கருவறையிலிருக்கும் பொழுது ஞான முடையவனாயிருக்கின்ற குழவிகளை அவை பிறந்தவுடன் தனது தொடுகையால் அஞ்ஞானத்திற்கு உள்ளாக்கி அமுதல், அரற்றுதல் முதலியன செய்யும்படி பண்ணிவிடும் தன்மையதான சடம்’ என்ற வாயு இவ்வாழ்வார் திருவ வதரித்த பொழுது தொடுவதற்கு வர இவர் அப்பொழுது அதனை உங்காரத்தால் ஒறுத்து ஒட்டி ஒழித்ததனால் *சடகோபர்’ என்று இவருக்குத் திருநாமமாயிற்று என்பதனையும் சிந்திக்கின்றோம். ஆழ்வாரைச் சேவித்த பிறகு அவர் இருந்த புளிய மரத்தையும் பார்க்க விரைகின்றோம். இந்தப் புளிய மரமே தலவிருட்சம். வைணவர்கள் இதனைத் திருப்புளி T28 இந்த நான்கு பிரபந்தங்களையும் முறையே இருக்கு, யசூர், அதர்வன, சாமம் என்ற நான்கு வேதங் களின் சாரமாகக் கொண்டு போற்றுவர் வைணவப் பெரு மக்கள். 29. பழம் பாடல்