பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் 16 # வளங் தழைக்க உண்டால்என்? வாசம் மணந்தால்என்? தெளிந்தகலை கற்றால் என்? சீசீ-குளிர்ந்தபொழில் தண்குருகூர் வாவிச் சடகோபன் ஊர்எங்கள் வண்குருகூர் என்னாத ត្.*?** (வளம் தழைக்க-வளமாக; கலை- சாத்திரங்கள்; பொழில்-சோலைகள்; வாவி-குளம்.! என்பது பாசுரம். திருத்துழாய், மணத்துடன் தோன்று வது போல் ஞான நலத்துடன் திருவவதரித்த நம்மாழ் வார் பிறந்த ஊர் எங்கள் ஊர்' என்று ஒரு தரமேனும் சொல்லுதலே வாய்படைத்த பயன் என்பது திவ்விய கவியின் கருத்து என்பதையும் அறிகின்றோம். இவற்றையெல்லாம் அறிந்த வண்ணம் கோயிலின் பிராகாரத்தில் ஓரிடத்தில் அமர்ந்து மனஅமைதி பெறு கின்றோம். திருக்கோயில் அலுவலர் ஒருவர் மூலம் இந்த ஊரில் தெற்கு மாடவீதியில் திருவேங்கடமுடை யான் சந்நிதியும், மேற்கு மாடவீதியில் அரங்கநாதன் சந்நிதியும், வடக்கு மாடத்தெருவில் பிள்ளை உலகா சிரியர், அழகர், தேசிகர், ஆண்டாள் சந்நிதிகளும் இருப்பதை அறிகின்றோம். இத்தனை பேர்களும் ஆழ் வாரைத் தேடி வந்தனரோ என்றுகூட நமக்கு எண்ணத் தோன்றுகின்றது. இத்திவ்விய தேசத்தைவிட்டுப் புறப்படுவதற்கு முன் இன்னொரு செய்தியையும்அறிகின்றோம். ஆற்றின்வடகரை யில் காந்தீசுவரம்' என்ற சிவன் கோயில் ஒன்று உள்ளது. இங்குக் கரூர்சித்தர் என்ற பெரியார் ஒருவர் இருந்ததாக 29. நூற் திருப் அந் 49. பா. தி-11