பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3, 62 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் வும், அவரிடம் நாய் ஒன்று இருந்ததாகவும், நாள்தோறும் அது திருக்குருகூர் தெருக்களில் விழும் எச்சில் உணவை அருந்தி வந்ததாகவும் தெரிந்து கொள்ளுகின்றோம். ஒரு நாள் அந்நாய் குருகூரிலிருந்து ஆற்றைக் கடந்து தன் இருப்பிடத்திற்குத் திரும்புங்கால் வெள்ளத்தின் நீர்ச் சுழலில் சிக்கி உயிர் இழந்ததாகவும், அப்பொழுது அதன் உயிர் ஒளி பெற்று மீளா உலகினை அடைந்ததாகவும், இதனைக் கண்ணுற்ற சித்தர் அழகான பாடல் ஒன்றினை அருளியதாகவும் அறிகின்றோம். "வாய்க்கும் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட காய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்தகாயோடு இந்தப் பேய்க்கும் பலமளித் தால்பழுதோ: பெருமாள் மகுடம் சாய்க்கும் படிகவி சொல்லும் ஞ:னத் தமிழ்க்கடலே.' என்பது அவர் பாடிய பாடல். இவரும் நம்மாழ்வாரைப் பாடி அவர் திருவருளைப் பெற்றதை நினைந்த வண்ணம் திருக்கோளுர் என்ற திவ்விய தேசத்தை நோக்கிப் பயண மாகின்றோம்.