பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோளுர் வைத்தமாநிதி 1.65 கின்றான். இவ்வாறு பாகவத சேஷத்துவம் பகவத சேஷத்து வத்தைச் சொல்லும் அகாரத்தில் புணர்ந்து கெட்ட வேற்றுமையில் கிடைக்கும். இனி, உகாரத்தில் பாகவத சேஷத்துவம் கிடைக்கும் விதத்தை விளக்குவோம். நறுமணம்’ என்ற சொற் தொடரை எடுத்துக் கொள்வோம். இதில் தறு’, ‘மணம்’ என்ற இரு சொற்கள் உள்ளன. இவற்றுள் மணம் போன்றது. சீவனுடைய சேஷத்துவம். அம்மனத்தின் தன்மையான தன்மையைப் போன்றது சேஷத்துவத்தின் அநந்யார்ஹத்துவம், அதைக் குறிப்பதே 'உ' என்னும் எழுத்து. இச் சேஷத்துவத்தைத் தெரிவிப்பது அகாரத்தில் புணர்ந்து கெட்ட வேற்றுமை. அதன் தன்மையான அநந்யார்ஹத்துவத்தைத் தெரிவிப்பது உகாரம், அநந்யார்ஹ சேஷத்துவம் என்பது பிறருக்கு உரியனா விருத்தல் அன்றி, ஈசுவரனுக்கே உரியனாயிருத்தல். இங்குப் பகவத் சம்பந்தம் பெற்ற பாகவதர்களைக் கழித்து, மற்றவர்களைப் பிறர் எனக்கொள்வது பொருத்தமுடைத்து. எனவே, இவ்வாறு பாகவத சேஷத்துவம் வரையிலுமுள்ள பகவத் சேஷத்துவத்தின் அநந்யார்ஹத்துவத்தை உகாரம் தெரிவிப்பதாகத் தோன்றுவதால் இப்பாகவத சேஷத்துவம் உகாரத்தில் கிடைக்கும் பொருள் என்பது சிலரது கருத்தாகும். திருமந்திரத்திற்கு முக்கியமான பொருள் பாகவத சேஷத்துவமே என்பதைத் திருமங்கையாழ்வார் பாசுரத் தாலும் அறியலாம். மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும் கற்று உற் தும் உன்னடியார்க்கு அடிமை' என்ற பாசுரப் பகுதியைக் காண்க. இதனை மேலும் தெளிவுபடுத்துவோம். உலகில் தமக்குத் தொண்டு 5. அநந்யார்ஹத்துவம் - பிறருக்கு உரியனல்லா திருத்தல்; அதாவது ஈசுவரனுக்கே உரித்தாயிருத்தல். 6. பெரி. திரு 8. 10; 3.