பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் புரிவதைக் காட்டிலும், தம் குழந்தைகளுக்கு அன்புடன் தொழில் புரியும் போதல்லவா பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்? அங்ங்னமே, ஈசுவரனும் தன் அடியார்க்குத் தொண்டு புரியும்போதுதான் பூரணமான முகமலர்ச்சியை அடைகின்றான். இதனைத் திருமுருக கிருபானந்தவாரியார் கூறும் உவமையைத் துணை கொண்டும் விளக்கலாம். கடிதங்களை நேரே அஞ்சல் திலையங்களில் சேர்த்தால் விதிகளில் உள்ள அஞ்சல் பெட்டிக்கு வருவதில்லை. ஆனால், வீதிகளில் உள்ள அஞ்சல் பெட்டிகளில் இடும் கடிதங்கள் அஞ்சல் நிலையத்தை அடையும். அஞ்சல் நிலையும் திருக்கோயிலில் உள்ள இறைவன்; அஞ்சல் பெட்டிகள் அடியார்கள்; பாகவதர்கள். ஆகவே இறைவனுக்கு அடிமை செய்வதை விட பாகவதர்கட்கு அடிமை செய்வது உயர்ந்தது என்பது தெளிவாகின்றதல்லவா?? இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் ஆழ்வார் திருநகரியிலிருந்து கிழக்கே இரண்டு கல் தொலைவிலுள்ள திருக்கோளுர்’ என்ற திவ்விய தேசத்திற்குப் புறப்படச் சித்தமாகின்றோம். திருக்கோளூர் நவதிருப்பத்களுள் ஒன்பதாவது. இஃது ஆழ்வார் திருநகரிக்குக் கிழக்கே இரண்டு கல் தொலைவிலும், திருப்பேரைக்கு மேற்கே இரண்டு கல் தொலைவிலும் உள்ளது. இதுவும் தண்பொருநைத் தென்கரையில் உள்ளது. நம்மாழ்வாரின் அந்தரங்க சீடரான மதுரகவி யாழ்வார் அவதரித்த திவ்வியதேசம். இது வரலாறு: தீர்த்த யாத்திரை திவ்வியதேச யாத்திரைகளில் திருவுள்ள முடைய மதுரகவியாழ்வார் பல திருப்பதிகளைச் சேவித்து வடநாட்டுத் திருப்பதிகளைச் சேவித்துக் கொண்டு திருவயோத்தியை அடைந்தார். அந்தப் பரிசுத்த பூமியில் வாசம் செய்யக் கருதிச் சில காலம் அங்கு வாழ்ந்து வரலாயினர். ہیلیسیمبا،-*ه 7. குமுதம்-21-11-14 இதழ்.