பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோளுர் வைத்த மாநிதி 171, இவற்றின் அடைமொழிகளின் நயம் உய்த்துணரத்தக்கது. வயிறு நிறைய உண்டவனுக்கு அறுசுவை உண்டி கிடைப் பினும் அஃது உண்ணும சோறாகாது; கங்கைக்கரையில் திரிபவனுககுக் கிணற்று நீர் பருகு நீராகாது. ஆகவே, பெரும் பசியனுக்குக் கிடைத்த சோறுதான் உண்ணும் சோறு, பெருவிடாயனுக்குக் கிடைத்த நீர் தான் பருகு நீர் என்று கொள்ள வேணடும். பெரும் பசியனுக்குச் சேசற்றி இம் விடாய்த்தவனுக்கு நீர் லும் எப்படிப்பட்ட அவர் இருக்குமோ அப்படிபபட்ட அவா ஆழ்வாருக்கு பகவத் விஷயத்தில் இருந்தது என்பது கருத்து. தனக்கு எல்லாம் கண்ணன்' என்று பலகால் சொல்லிக் கொண்டு நீர்மல்கு கண்ணினராயிருப்பதே ஆழ்வாருடைய இயல்பாகும். இப்படிப்பட்ட பராங்குச நாயகி அப் பெருமானுடைய திருக்குணங்களும் திவ்விய மான ஐகவரியமும மிக்கு விளங்கும் திருக்கோளுர் எங்கு உளது. எவ்வளவு துரம் நடக்க வேணும்? என்று வி ைவிக்கொண்டே தருக்கோளுர்க்கே சென்று சேர்ந் திருப்பாள். வேறு எங்கும் போவதற்குக் காரணம் இல்லை. இது திண்ணம்' என்கின்றாள் திருத்தாயார். புகுமூர்' என்ற விடத்து ஈடு : காட்டுத் தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாப் போலே சம்சாரமாகிற பாலை நிலத்தில் காட்டுத் தீயில்ே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் போலேயிறே, புகுமூர்’ என் கையாலே புக்கார் போகுமூர் அன்றென்கை, இன்சுவை மிக்க இதனை எண்ணி மகிழ்க. எம்பெருமானார் திவ்விய தேச யாத்திரையாக எழுந்தருளுகையில் திருக்கோளுரை நோக்கிச் செல்லுங்கால், அப்போது அவ்வூரினின்றும் வெளியேறுகின்றாளோர் அம்மையாரைக் கண்டார். அவரைப் பார்த்து எங்கு நின்றும் புறப்பட்டபடி?’ என்று வினவ, அந்த அம்மையார் திருக்கோளூரில் நின்றும்’