பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டி நாட்டுத் திருப்பதிகள் என்று பதிலுரைத்தார். அது கேட்டு யதிராசர் அவ்வூரில் புக்க பெண்களும் வெளியே போகக் கடவராயிருப்பார் களோ?' என்றாராம். புகுமூர்' என்ற சொல்லின் சுவ நிந்து அருளிச் செய்த ஆசாரியரின் வினாவின் உட் பொருளைச் சிந்தித்து மகிழ்க. அடுத்து, பராங்குச நாயகியின் விளையாடு கருவி பாக அமைந்து பூவைகளை நோக்கி, என் பக்கலில் என் டிகள் நசையற்று ஒழிந்தாளாகிலும் உங்களை நினைத் தாவது இங்கு மீண்டு வரக் கூடுமோ? சொல்லுங்கள்’ என் கின்றார் திருத் தாயார். இங்கிருந்த போது தன்னைப் போலவே தன்னைச் சேர்ந்த எல்லோரையும் எம்பெருமா னுடைய திருநாமங்களையும் சின்னங்களையும் இடை யறாது சொல்லிக் கொண்டிருக்கும்படி செய்தவளல்லவா என் மகள்? இங்கே ஆட்கள் இலர் என்ற குறையால், அங்குப் போனாளா? என்கின்றாள்.' மேலும் பேசுகின்றாள்: 'பூவைகள், பைங்கிளிகள், சிறு சோறு சமைக்கும் பானைகள், பூவிடும் குடலைகள் முதலானவற்றைக் கண்டால் விளையாடும் இன்பம் (மகிழ்ச்சி பெற வேண்டிய பருவத்திலும் எம்பெருமான் திருநாமத்தையே சொல்லிப் பெறுகின்றவள் அல்லவா என் மகள்?’ என்கின்றாள். அங்ங்னம் போன பின்பு இனிச் செய்யலாவதொன்றில்லை, போன இடத்திலாவது நன்றாக இருக்க வேண்டுமே. ஒரு பேச்சுப் பேச வாய் எடுத்தாலும், வாய்விட்டுப் பேசமுடியாதபடி உதடு நெளிக்குமே. கண்ணநீர் வெள்ளமிட்டுப் பெருகுமே. இப்படி என்ன பாடுபடுகின்றாளோ?' என்று தடுமாற்றம் அடைகின்றாள்.'" தன் மகள் பிரிந்து சென்ற செய்தியறிந்த வம்ப ளக்கும் இயல்புடைய ஊர்ப்பெண்கள் உகப்பார்களோ? அன்றி வெறுப்பார்களோ? என்று ஐயுறும் திருத் 12 திருவாய் 6.1:2 13. திருவாய் 6.7:3