பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருப்பேரெயில் மகரநெடுங் குழைக்காதன் திருமாலுக்கு அடிமை செய்தலை வைணவ சமயத்தின் முடிந்த முடியான குறிக்கோள் பொருளாகக் கொள்வர் வைணவப் பெருமக்கள். 'எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கேகாம் ஆள்செய்வோம்' என்ற சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திருவாக்கினால் இதனை அறியலாம். எம்பெருமானிடம் ஈ டு ட ட் டு அவனுக்குத் தொண்டு புரிதலே பிறவியின் பயனாகக் கருது கின்றார் கோதைப் பெருமாட்டி. எத்தனை பிறவிகள் எடுப்பினும் பிறவியின் பயன் கைங்கரியம் புரிதலே யாகும் என்பது அன்னையாரின் முடிந்த முடிபாகும், ஈசுவரனிடம் பக்தி செய்து அவனுக்குத் தொண்டு பூண்டொழுகுவார் இருதிறப்படுவர். இவ்வுலகச் செயல் களையேனும் வீட்டின் பேற்றையேனும் கருதி இறைவன் மாட்டு அன்பு செலுத்துவர் ஒருசாரார்; அவன் தத்துவத்தை. யும், ஆன்மாவின் உண்மை நிலையினையும் ஆய்ந்து எம்பெருமானுக்கு இன்பத்தை (முகமலர்ச்சியை) ஊட்ட வேண்டும் என்னும் ஒரே எண்ணத்தைக் கொண்டு 1. திருப்-29