பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் அவனிடன் பக்தி செலுத்தி அவனுக்குக் கைங்கரியம்’ செய்வார் மற்றொரு சாரசர். இவற்றுள் பிந்தியவரே உண்மைப் பக்தராவர். இவ்விடத்தில், கைங்கரியம் தன்னைப் பல சாதனம் ஆக்காதே பலமாக்க வேணும்' (சாதனம்-ஒரு பலனைப் பெறுவதற்குக் கருவியாக இருப்பது; பலமாக்குதல் - இறைவனுடைய பிரீதி ஒன்றனையே கருதுதல் என்ற ரீவசன பூஷணத்தின் சூத்திரம் கருதத்தக்கது. இதன் கருத்தை, 'அதாவது, தான் கை ஏலாதே அவனைக் கை ஏற்கப் பண்ணுகை.' என்ற அடுத்த சூத்திரத்தால் விளக்குவர் பிள்ளை உலக ஆசிரியர். கைங்கரியம் செய்கின்ற தான் எம்பெருமான் பக்கல் ஒன்றனையும் விரும்பாமல் கைங்கரியம் செய்தலையே ஒரு பயனாகக் கொண்டு கைங்கரியம் கொள்ளுகின்ற அவனைத் தன் நிறைவினைப் பாராமல் விருப்பத்தோடு கூடியவனாய் விரும்பிக் கைக் கொள்ளும்படி பண்ணுதலாகும். மேற்கூறிய செயல் மட்டிலும் போதாது, இன்னும் ஒருபடி மேலும் போக வேண்டும் என்று விரும்புகின்றார் அந்த ஆசிரியர். 2. கைங்கரியம்- கிங்கரன் செயல்; கிங்கரனாவான்தனக்கென்று ஒரு பயனையும் கருதாது, தலைவனது விருப்பின் படியே செய்பவன். எதையும் செய்கிறவன் என்றவாறு. 3. நீ வசன பூஷ-287. 4. ഒു -288.