பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பேரெயில் மகரநெடுங் குழைக்காதன் 183 அருகில் 'இன்' சாரியை வருவதில்லை. ஆயினும், தென்திருப்பேரை' என்று ஐகாரiற்றதாக இத் திவ்விய தேசம் வழங்கி வருவதிலும் குற்றமில்லை. நாங்கூரை :நாங்கை என்றும், தஞ்சாவூரைத் தஞ்சை என்றும், குடமூக்கைக் குடந்தை' என்றும்,அமுந்துரை அழுந்தை' என்றும், நெல்வேலியை தெல்லை என்றும், அவிந்திர புரத்தை அபிந்தை என்றும் இங்கனம் ஐகாரவிந்த தாக்கி வழங்கிவரும் முறையிருப்பதனால் திருப்பேரெயிலைத் 'திருப்பேரை' என்று வழங்குவது பொருத்தமே யாகும். எனவே, நூற்றெட்டுத்திருப்பதி யந்தாதியிலும், ஈடு முதலிய வியாக்கியானங்களிலும் திருப்பேரை' என் திருப்பது தவறு இல்லை. ஆகவே, திருத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஆயினும், திருவாய்மொழி மூலத்தில் மட்டிலும் பேரெயில்’ என்றிருப்பதே சரியான பாடமாகும். எனினும். இத் திருவாய் மொழியில் ஒன்று. இரண்டு மூன்று, நான்கு எட்டு, பத்தாம் .ாக ரங்களில் தென்திருப்பேரையில்: என்று பாடங்கொள்வதால் தவறு இல்லை என்பது சிலருடைய கருத்து. திருப்பேரெயில் என்ற திவ்விய தேசம் நீர்வளம் நிலவளம் மிக்கது. தேன் மொய்த்த பூம்பொழில் தன் பனை சூழ் தென் திருப்பேரெயில் கணித்த பொழில் திருப்பேரெயில் கோலச் செந்நெற்கள் சுவரி வீசும் கூடுயுனல் திருப்பேரெயிற்கே" ஏர் வள ஒன்கழனிப் பழனத் தென் திருப்பேரெயில் என்ற ஆழ்வார் திருவாக்குகளால் இதனை அறியலாம். சிற்றுந்தில் (Wan) வந்து கொண்டிருக்கும்பொழுதே இந்தச் சூழ் நிலையை நாம் காண்கின்றோம். வண்டி ஊருக்குள் செல்கின்றது. ஊர் பெரிய ஊரும் அன்று; சிற்றுாரும் அன்று. ஆழ்வார் காலத்தில் ஒருகால் 7. திருவாய் 7.3:2 8. ഒു. 7,8:5 9. ബ്ലേ ?.3:6 10. ഒു. 1.8:9,