பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18链 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் சற்றுப் பெரிய ஊராக இருந்திருக்கலாம். சிகரமணி நெடுமாட நீடு தென் திருப்பேரெயில்,' என்ற ஆழ்வார் திருவாக்கால் அக் காலத்தில் மாடமாளிகை கூடகோபுரங் கள் கொண்ட ஊராக இருந்திருக்கக்கூடும் என்று ஊகம் செய்யலாம். இன்று அத்தகைய பெரிய மாளிகைகள் தென் படவில்லை. பக்தி இயக்கம் ஓங்கியிருந்த ஆழ்வார் வாழ்ந்த காலத்தில் சிறந்தோங்கும் திருக்கோயில்கள் உள்ள ஊர்களில் அந்தணர்கள் நான்மறைகளை ஒதும் முழத் கத்திற்கும், நாள்தோறும் நடைபெறும் விழாக்கட்கும், திங்கள் தோறும் நடைபெறும் விழாக்கட்கும், ஆண்டு தோறும் நடைபெறும் பெரு விழாக்கட்கும் குறைவில்லை. உண்மையான கடவுள் பக்தியும் வழிபாடும் அருகி வரும் இக் காலத்திலேயே திருவரங்கம், திருப்பதி போன்ற திவ்விய தேசங்களில் விழாக்கள் தவறாது நடைபெறத்தான் செய்கின்றன. அப்படியிருக்கும் போது அக் காலத்தில் திவ்விய தேசங்களில் எவ்வளவு விழாக்கள் நடைபெற்றிருக்க வேண்டும்? நான்மறை ஒதும் வழக்கம் மலிந்திருந்தது என்பதை எங்கும் எழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கும் தென்திருப் பேரெயில்,” “நான் மறையாளரும் வேள்வி ஒவா ........ திருப்பேரெயில்' என்ற ஆழ்வார் திருவாக்குகளால் அறிகின்றோம். இன்னொரு பாசுரத்தில் வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக்குழாம் விளையாட்டொலியும் அறசத்தென்திருப்பேரெயில்' என்று மூன்று ஒலிகளும் கலந்து திகழும் ஊர் என்பதாகவும் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். so நாம் வந்த சிற்றுந்தினை தெருவின் ஓர் ஒரத்தில் நிறுத் திவிட்டு திருக்கோயிலை நோக்கி விரைகின்றோம். 11. திருவாய் 7.3:10. 18. ഒു. 1.3:6. 12 ഒക്ട .3:4