பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பேரெயில் மகரநெடுங் குழைக்காதன் 185 இத் திருக்கோயிலின் சந்நிதித் தெரு சற்று விசால மானது. சிற்றுாரில் சிறு பிள்ளைகள் விளையாடுவதற்கு ஆடுகளன் (Play ground) தனியாக இருக்க முடி யாதல்லவா? இளஞ்சிறார்கள் தெருவினையே ஆடு களனாகப் பயன்படுத் திக் கொண்டு சதா ஏதாவதொரு விளையாட்டில் ஈடுபட்டிருப்பதை இன்னும் சிற்றுார் களில் நாம் காணலாம். இந்தத் திருப்பதியில் சிறார்கள் விளை யாடும் இடம் கோயிலின் திருமுன்பிருக்கும் சந் நிதித் தெருவாகவே அமைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே ஆழ்வாரும் பிள்ளைக்குழாம் விளையாட் டொலியும் அறசத்திருப்பேரெயில்' என்று சிறப்பித் தனர் போலும்! இத் திருப்பதி எம்பெருமானும் அச் சிறார்கள் ஆடும் விளையாட்டின் சுவையைக் கண்டு களிக்க ஆசைப்பட்டதாக ஒர் ஐதிகம் உண்டு. எதிரே யுள்ள பெரிய திருவடி சந்நிதி அவர்கள் விளையாடும் காட்சியை மறைப்பதாக இருப்பதைக் கண்டு வருந்தி *கருடா, அப்பால் செல்க' என்று பெருமாள் வெறுத் துரைத்தாராம். அந்த ஐதிகம் இன்றும் நிலை பெற் றிருப்பதை உணர்த்துவான் வேண்டி கருடன் சந்நிதி சற்று ஒதுக்கமாக இருப்பதை நாம் காணலாம். திருக்கோயிலுக்குள் நுழையச் சித்தமாகின்றோம். இத் திருக்கோயில் எம்பெருமான்மீது நம்மாழ்வார் மட்டிலும் ஒரு திருவாய்மொழியால் மங்களா சாசனம் செய்துள்ளார். இத்திருவாய்மொழி மகள் பாசுரமாகச் செல்லுகின்றது. பெண்மை நிலையிருந்து கொண்டு ஆழ்வார்கள் எம்பெருமானை அநுபவிக்கும்பொழுது அவர்கள் தாய், தோழி, மகள் என்ற இம்மூவரில் ஒரு வரின் தன்மையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த் துவர் என்றும், இவற்றிற்குத் தத்துவமும் உண்டு என்றும் விளக்கியுள்ளோம். அவற்றினை அன்பர்கள் அந்த 14. திருவாய் 7.3:1.