பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 86 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் இடங்கள் நோக்கி அறிந்து தெளிய வேண்டுகின்றேன்: பராங்குச நாயகிக்குத் திருப்பேரெயில் எம்பெருமானைக் கிட்டியே தீர்வேன்' என்னும் ஆற்றாமை பிறக்கின்றது. அந்த எம்பெருமானிடம் போக வேண்டுமென்று புறப் படுகின்றாள் ஆழ்வார் நாயகி. தோழிமாரும் தாய்மாரும் அவளைச் சூழ்ந்துகொண்டு, "உனக்கு அவனிடம் இவ் வளவு ஈடுபாடு ஆகாது; இது நமக்குப் பழியாக முடியும் என்கின்றனர். நீங்கள் தடைசொல்லுகின்ற வற்றால் ஒரு பயனும் உண்டாக மாட்டாது. நீங்கள் எனக்கு உரைப்ப தெல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தையாக முடியும்'" நான் திருப்பேரெயில் எம் பெருமானால் நெஞ்சு பறியுண்டேன். ஆகவே, நானே போனதாக ஏற்படாமல் நீங்களே என்னை அங்குக் கொண்டு போய்ச் சேர்க்கப் பாருங்கள்’ என்று பராங் குசநாயகி அவர்கட்குக் கூறித் தனக்குப் பிறந்த துணிவை அவர்கட்குச் சொல்லுகிறதாகச் செல்லு கின்றது இத் திருவாய்மொழி, பாசுரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நமது உள்ளத்தில் குமிழியிடத் தொடங்கு கின்றன. "வெள்ளைக் கரிசங்கொடு ஆழி ஏக்தி தாமரைக் கண்ணன்னன் நெஞ்சிலுரடே புள்ளைக் கடாகின்ற ஆற்றறைக் காணிர் என்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர் காள்???? |கரிதல்-உள்ளே சுழித்திருத்தல்; ஆழி-சக்கரம்; புள்-கருடன். கடாகின்ற ஆறு-நடத்துகின்றபடி) 15. சுப்பு ரெட்டியார், ந : மலைநாட்டுத் திருப்பதிகள் கட்டுரைகள் 7, 8, காண்க. அன்றியும், இதே ஆசிரியர் எழுதியுள்ள திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்” (பாரி நிலைய வெளியீடு) என்ற நூலிலும் பக். (123 -132)காண்க. 16. நாச். திரு 12:1. 17. திருவாய் 7.3:1