பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓝莎8 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் "அரவத்து அமளி வினோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பாவைத் திரைபல மோதப் பள்ளிகொள் கின்ற பிரான்' |அரவம் - பாம்பு அமளி - படுக்கை அரவிந்தப் பாவை பெரிய பிராட்டி.} என்றவாறு அந்த ஆழ்வார் மனத்து எழுந்தருளிய பிரானும் நமக்குக் காட்சி தருகின்றான். பராங்குசநாயகி செய்ய நினைத்த செயலையும் எண்ணுகின்றோம். வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக் குழாம் விளையாட்டொலியும் மலிந்து கிடக்கின்ற திருப்பேரைக்குச் சென்று சேர்வதே தன் பணியாகும் என்று கூறினதை நினைக்கின்றோம். அன்று ஆழ்வார் நாயகி பெற்ற அதுபவக் காட்சிகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நம்மனத்தில் எழுகின்றன. இங்ங்னம் தாய்மார்களின் முகம் நோக்கிப் பேசிக் கொண்டிருக்கும்பொழுது தோழிமார்களும் அயற்சேரி மாதர்களும் வந்து குழுமுகினறனர் அவளுக்கு இதோப தேசம் செய்வதற்காக. அவர்களை நோக்கி, ஆழ்வார் நாயகி. கானக் கருங்குழல் தோழி tர்காள்! அன்னையர் காள்!அயற் சேரியீர்காள்! காணித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன் என்வசம் அன்று இது (நானம் - பரிமளம், நறுநாற்றம்; காக்க - அடக்கி ஆள ! ങ്ങബങ്ങ-l. 18. பெரியாழ். திரு. 5.2:10 19. திருவாய் 7. 3: 2