பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

箕懿 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் வனைக்கொண்டு போதுபோக்கவோ? ஆரைக்கொண்டு எத்தை உசாவுவது?’ என்ற ஈட்டுரையைக் காண்மின். அடுத்து, ஆழ்வார் நாயகி தாய்மார் தன்னைக் கடுகக் கொண்டுபோய்த் தென்திருப்பேரையில் சேர்ப்பதே அவர்கள் கடன் என்பதை வற்புறுத்துகின்றாள்.

முனிந்து சகடம் உதைத்து மாயப்

பேய்முலை யுண்டு மருதி டைபோய் கணிக்த விளவுக்குக் கன்றெ றிந்த கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன் முனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள்! முன்னி யவன் வந்து வீற்றி ருந்த கனிந்த பொழில்திருப் பேரெ பிற்கே காலம் பெறவென்னைக் காட்டு மினே’’ |மாயப்பேய் - வஞ்சகப்போய்; முனிந்து - சினந்து, காலம் பெற-காலதாமதமின்றி,; என்ற பாசுரத்தில், எம்பெருமானுடைய சில வீரக் செயல்களில் தான் ஈடுபட்டமையைத் தெரிவிக்கின்றாள். சகடம் ஒன்றில் ஆவேசித்து வந்த அசுரனை முடித்த தீரச்செயலிலும், அழகிய வடிவங்கொண்டு நஞ்சூட்டிய முலையினால் பாலூட்டிக் கொல்ல வந்த பூதனையின் உயிர் குடித்த அற்புதச் செயலிலும், தன்னைக்கொல்லுவ தற்காகச் சமயம் பார்த்திருந்து விளாமரத்தில் ஆவேசித் திருந்த கபித்தாசுரனையும், அங்ங்னமே கன்றின்மீது ஆவேசித்திருந்த வத்ஸாசுரனையும் ஒருங்கே முடித்த வரச் செயலிலும், இரட்டை மருதமரங்களிடையே தவழ்ந்து சென்று நளகூபரமணிக்கிரீவர்களின் சாபத் தைப் போக்கின அதிசயச் செயலிலும் ஆழவார் நாயகி ஆழங்கால்பட்டுத் தன் பெண் மைக் குணங்கள் அனைத் தையும் இழந்தமையைப் புலப்படுத்துகின்றாள். இச் 26. திருவாய் 7, 3 : 5