பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பேரெயில் மகரநெடுங் குழைக்காதன் 193 செயல்களில் ஈடுபடாததற்கு முன்னரே முனிந்தாலும் பயனுண்டு. தண்ணிர் பெருகிச் சென்றபின் அணை கட்டப் பார்ப்பதில் பயனில்லை. ஆகவே, தன்னைக் கொண்டு போய்க் காலதாமதமின்றி அவன் காலடியில் சேர்ப்பதே அவர்கள் கடமையாகும் என்கின்றாள். ஆழ்வார் நாயகி எம்பெருமானை உருவெளித் தோற்றத்தில் காண்கின்றாள். ஆகவே, காலம் நீட்டியாது அவனைத் தான் காணுமாறு செய்யும்படி வேண்டு கின்றாள். 'காலம் பெறஎன்னைக் காட்டு மின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால் நீல முகில்வண்ணத் தெம்பெ ருமான் கிற்குமுன் னே வந்து என் கைக்கும் எய்தான்.' (முகில்-மேகம்; வண்ணம்-நிறம்.) என்பது அவள் திருவாக்கு. ஆழ்வார் நாயகி தனது ஆராக்காதலை இதில் புலப்படுத்துகின்றாள். ஐந்தாம் பத்தில் மோசறுசோதி' என்ற திருவாய் மொழியில், பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த காரமர் மேனி' என்று தன் காதலைக் கடலோடொத்ததாகச் சொன்னவள் ஈண்டு அது கடலினும் மிகப் பெரிதால் என்று கூறுகின்றாள்; கடலினும் விஞ்சியதாகச் செப்புகின்றாள். இத் திருத்தலத்துமீதுள்ள திருவாய்மொழி எட்டாம் பாசுரத்தில்,

என்காதல் உரைக்கில் தோழி, மண்டினி ஞால மும் ஏழ் கடலும்

நீள்வி சும்பும் கழியப் பெரிதால்." 27. திருவாய் . 3 : 6 28 ഒക്ട 5,3 :4 29. 64 7. 3 : 8 பாதி-13