பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 34 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் (மண்திணி-மண்செறிந்த ஞாலம்-பூமி, விசும்பு. ஆகாயம்) என்று கூறுகின்றாள். இறுதியாக, ‘சூழ்ந்தத னில்பெரிய என் அவா? என்று தன் அவா தத்துவத்திரயத்தையும் வளைத்துக் கொண்டு அதனிலும் மிகப் பெரியது என்று சொல்லித் தீர்க்கின்றாள். இப்படிக் கனத்த காதலையுடையவள் எங்கனம் பதறாது இருப்பது என்கின்றாள் போலும். 'நீல முகில் வண்ணத்து எம்பெருமான் முன்ன்ே வந்து நிற்கும் போது இஃது எங்ங்னம் சாத்தியமாகும்? என் கின்றாள். காலம் பெற என்னைக் காட்டுமின்கள்? என்ப தற்கு ஈடு : “குடிக்குப் பரிஹாரமன்றாகிலும் எனக்குப் பரிஹாரம் இஃதல்லது இல்லை.” வெறும் உருவெளிப் பாடன்றியே கண்ணாலே கண்டநுபவிக்கலாம். திருப் பதியிலே போகப் பார்ப்பதாகப் பகர்கின்றாள். அடுத்த பாசுரத்தில் அவள் கூறுவது : இலங்கையை நீறாக்கியொழித்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடமான திருப்பேரைக்குச் சென்ற என் நெஞ்சு மீண்டும் திரும்பிவரக் காணேன். வெற்றித் திருமகளுடன் எழுந் தருளியிருக்கும் எம்பெருமான் இருப்பைக் கண்ட பிறகு அது திரும்பி வராது என்பது உறுதி. ஆகவே,

ஆரை யினியிங் குடையம் தோழி!

என்னெஞ்சம் கூவவல் லாரு மில்லை ஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது? என்னெஞ்சம் கண்டது வேகண் டதுவே.31 என்கின்றாள். 'என் நெஞ்சினை அழைத்து வரவல்லாரும் இல்லை. ஆகவே என் நெஞ்சு போய்ச் சேர்ந்த தேசத்தி லேயே நானும் போய்ச் சேர்வதே தகுதி என்று உரைக் கின்றாள். பேரெயிற்கே புக்கென் னெஞ்சம் நாடிப் 30. திருவாய் 10. 10 : 10 31. டிை 7. 3 : 7