பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பேரெயில் மகரநெடுங் குழைக்காதன் 195 பேர்த்துவர வெங்கும் காணமாட்டேன்’ என்ற இப் பாசுரத்தின் இரண்டாம் அடிக்கு இன்சுவை மிக்க நம் பிள்ளையின் ஈடு : “மீளவொண்ணா த லங்காபுரியிலே புக்க திருவடியும் மீண்டு வந்தான்; அணித்தான இவ்வூரிலே புக்க நெஞ்சு மீண்டுவரக் காண்கிறிலேன். நெஞ்சுங்கூட வாராத பின்பு அவன் வாராமை சொல்ல வேண்டாவிறே’ இது சுவைத்து மகிழத்தக்கது. அடுத்த பாசுரத்திலும் :தென்திருப்பேரெயில் சென்று சேர்வன்' என்று தன் மன உறுதியைத் தோழிக்குப் புலப்படுத்துகின்றாள். அதற்கடுத்த பாசுரத்தில் என்னைத்தேற்ற வேண்டா; என் நெஞ்சும் அடக்கம் முதலான குணங்களும் இங்கில்லை. எனவே, மேற்படி திருப்பதியை சென்று சேரக்கடவேன்' என்று தோழியர்க்கும் அன்னை மார்க் கும் கூறுகின்றாள். '

சென்று சேர்வேன், சென்று சேர்வேன்' என்று பலகாலும் சொன்ன பராங்குசநாயகியை நோக்கி, *நங்காய், நீயே சென்று சேர்ந்தாயாகில் ஊரும் நாடும் மற்றுமெல்லாரும் உன்னைப் பழி சொல்லாரோ? என்று வினவ, அதற்கு அவள், பழிசொல்லுவாரையன்றோ நான் தேடுவது?’ என்று பதிலிறுக்கின்றாள். பழி சொல்பவர்கள் அவனையும் இவளையும் சேர்த்துப் பழி சொல்லுங்கால் அதுவே இவளுக்குப் பரம உத்தேசம் ஆகும். அவனுடன் தனக்குச் சேர்த்தி இல்லையேயாகிலும் பழி சொல்லுவாரின் கருத்தாலேயாகிலும் சேர்த்தி நேர்கின்றதன்றோ? அதுவே இவளுக்கு உவப்பாகும் போலும்,

இங்ங்ணம் நாயகி நிலையை அடைந்து எம்பெருமான் மீது ஆராக்காதல் கொண்டு திருக்கோயிலில் நுழைந்து கருவறையை அடைந்து இத்திருப்பதி எம்பெருமான் மகர நெடுங்குழைக்காதனையும்’ எம்பெருமாட்டி குழைக் காது வல்லிநாச்சியாரையும் சேவிக்கின்றோம். எம்பெரு 32. திருவாய் 7, 3 : 33. . 3 : 9 34. ഒു. T. 3; 10