பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பேரெயில் மகரநெடுங் குழைக்காதன் 1 97 என்ற சூத்திரம் நினைவிற்கு வர அதனையும் சிந்தனை செய்கின்றோம். இத் திருப்பதிக்குரிய திருவாய்மொழி யின் செங்கனிவாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும், சங்கொடு சக்கரம் கையுகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்' (3) என்ற திருப்பாசுரப் பகுதியைத் திருவுள்ளம்பற்றி இத்திவ்விய தேசத் தில் செளந்தரிய குணம் விளங்கும் என்றார். :தென் திருப்பேரெயில் மாநகரே?? (9 என்ற திருப் பாசுரப் பகுதியைத் திருவுள்ளம் பற்றி மாநகர் என் கின்றார். எங்கும் எழுந்த நல்வேதத்தொலி நின் றோங்கும்” (4 என்ற தி நப்பாசுரப் பகுதியைத் திரு வுள்ளம் பற்றிக் கோஷிக்கும்’ என்கின்றார். திருப்பேரெ யில் சென்று சேர்வது என்று உறுதி பூண்டவர்களுக்கு எம்பெருமானது அழகானது அநுபவித்த மகிழ்ச்சி யினால் அங்குள்ளார் பாடுகின்ற சாமவேத ஒலியிலே தெரியும். இந்நிலையில் பக்தியநுபவம் நிறைந்த மனத்துடன் திருக்கோயில் பிராகாரங்களில் வலம் வருகின்றோம். பிராகாரங்களில் உள்ள கடவுளர்களையெல்லாம். சேவிக் கவும் செய்கின்றோம். கோயில் பெரியது. இறுதியில் பிராகாரத்தில் ஒரிடத்தில் அமர்ந்து இத் திருத்தலம் பற்றிய குறிப்பு ஏதாவது கிடைக்குமா என்று சிந்திக் கின்றோம். பிற்காலப் பாண்டிய மன்னருள் ஒருவரான சுந்தர பாண்டியன் என்பான் பல சிற்றுார்களில் வாழ்ந்த சாம வேதிகளான நூற்றெட்டு ரீ வைணவக் குடும்பத்தாரை இப்பகுதியில் குடியேறச் செய்து அவர்கட்கு இருப் பிடமும் நிலமும் வழங்கி வாழச்செய்தான். பின்னர் 17-ம் நூற்றாண்டில் தமிழகம் முழுவதும் விசயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் அமைந்தது. அந்த ஆட்சியில் சொக்கநாத நாயக்கர் (கி. பி. 1659-831 ஆட்சிக் காலத்தில் தென்பாண்டி நாட்டை வடமலையப்பப் பிள்ளையன்