பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#: 8 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் என்பவர் ஆண்டு வந்தார். இவர் தெய்வபக்தி நிறைந்த சீலர்; புலவர்களை ஆதரித்துப் போற்றும் வள்ளண்மை வாய்ந்தவர். இவரும் தமிழ்ப் புலமை மிக்கவர்; கவிபாடும் திறமையும் உடையவர். அந்நாளில் தென் திருப்பேரையில் நாராயண தீட்சிதர் என்பார் ஒருவர் வாழ்ந்திருந்தார். இவர் வடமொழி, தமிழ் ஆகிய இரண்டிலும் வல்லவர். தமிழில் கவிபாடும் ஆற்றலும் பெற்றவர், நாடோறும் ஆழவார் திருநகரிக்குச் சென்று நம்மாழ்வாரைப் பணிவ தும், திருப்பேரை மகர நெடுங்குழைக்காதனை வணங்கு வதும், நல்ல நூல்களை விரும்பிப் பயில்வதும் இவரது பொழுது போக்குச் செயல்களாகும். தமக்குச் சொந்தமாக வுள்ள வீடு, நிலம் இவற்றைக்கொண்டு அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்தார். ஓராண்டு மழையின்றி விளைச்சல் குறைந்தது. இவரும் இவரையொத்த சிலரும் அரசிறை செலுத்தத் தவறினர். வடமலையப்பப் பிள்ளையனிடம் நேரில் சென்று தவணை கேட்பதற்குள் அரசிறையை வசூலிக்கும் அதிகாரியொருவர் இவர்கள் கூறும் சமாதானத்தை, ஏற்றுக்கொள்ளாது இவர்களைத் திருநெல்வேலிக்கு. வருவித்துச் சிறையில் அடைப்பித்தார். சிறைப்பட்ட செந்தமிழ்ச் செல்வராகிய தீட்சிதர் எல்லாம் தம் விதி யின் செயல் என்று கருதி சிறை வீடு பெறும் நோக்கத் துடன் மகர நெடுங்குழைக்காதன் மீது பாமாலையொன்று. பாடத் தொடங்கினார். நாடோறும் சில பாடல்கள் வீதம் இயற்றி வந்தார். இதற்குள் ஒரு திங்கள் கழிந்தது.

திங்கள் ஒன்றாகச் சிறையிருங் தோம்.இச் சிறையகற்றி எங்கள் தம்பா லிரங்காத

தென்னோ? இசைகான்மறையின் சங்கமும் கீதத் தமிழ்ப்பாட லும்சத்த சாகரம்போல் பொங்குதென் பேரைப் புனிதt கருணைப் புராதனனே.”