பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவைகுந்தத்துத் தேவன் 207 மாகவே விற்றிருக்கும் திருக்கோலத்தில் உள்ள பாண்டவ து தனையே (திருப்பாடகத்திலுள்ள எம்பெருமான்) பொருளாகக் கொள்வதே அடுக்கும் என்றும் திருவுள்ளம் பற்றியே வீற்றிருக்கும் தலமான திருப்பாடகத்தை எடுத்துக் காட்டின அந்த உரை மன்னனின் நுட்பமான அறிவை எண்ணி மகிழ்கின்றோம். இது அநுபவாசனையின் போக்கு. இந்த முறையில் இப்பாசுரத்திலுள்ள,

புளியங்குடிக் கிடந்து வரகுண மங்கை இருந்து வைகுக்தத்துள் கின்று'

(புளியங்குடி-சீவைகுந்தத்தினின்றும் இரண்டு கல் தொலைவிலுள்ளது; வரகுணமங்கை - சீவைகுந்தத்தி னின்றும் ஒரு கல் தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையிலுள்ளது.) என்பதன் பொருள் கண்டு அநுபவித்து மகிழத்தக்கது. திருப்புளிங்குடியில் கிடந்ததோர் கிடக்கும் அழகைக் காட்டியும், வரகுணமங்கையில் இருந்த கோலத்து எழிலைக் காட்டியும், சீவைகுந்தத்தில் நின்ற திருக்கோலத்து வனப்பைக் காட்டியும் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட எம்பெருமான் பெருங்கருணைத் திறத்தைப் பேசி மகிழ் கின்றார் ஆழ்வார் என்பதை நாமும் எண்ணிக் களிக் கின்றோம். இவ்விடத்தில் ஆசாரிய ஹிருதயத்தில் நம்மாழ்வார் உகந்த திவ்விய தேசங்களில் விளங்கும் திருக்குணங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டும் பகுதியில் இந்த மூன்று தலங்களிலும் சேர்ந்து ஒன்றாக விளங்கும் திருக்குனத்தை எடுத்துக்காட்டும்.

போக்கிய பாகத்வரை, தெளிந்த சங்

தைக்கு முன்னில் மூன்றிலும் பிரகடம்’’’ 8. ஆசா ஹிரு-171 (புருடோத்தம நாயுடு பதிப்பு.)