பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவைகுந்தத்துத் தேவன் 2的9 "தாருடுத்துத் துசு தலைக்கணியும் பேதையிவள் நேருடுத்த சிங்தை கிலையறியேன் போருடுத்த பாவைகுந்தம் பண்டொசித்தான் பச்சைத் துழாய்காடும் சீவைகுக்தம் பாடும் தெளிந்து.' !தார்-முடியில் அணியும் மாலை; தூசு அரையில் உடுத்த வேண்டிய ஆடை நேர் உடுத்த சிந்தை-நேர்மை யாகச் சென்று கொண்டிருந்த மனம்; போர் உடுத்த-போர் புரிவதற்குச் சித்தமான பாவை-தாடகை, குந்தம்சூலாயுதம்; ஒசித்தான்-முறித்த திருமால்; நாடும்-விரும்பு வாள்; என்ற பாசுரத்தை ஓதி உளங்கரைகின்றோம். இது "தலைவியின் இளமை கண்ட செவிலி இரங்கல்’ என்ற துறையில் அமைந்தது. தலைமகனைக் (எம்பெருமானைக்) களவொழுக்கத்தால் கூடிப் பிரிந்த தலைமகள் அவன் தன்னைப் பிரிந்தமைக்கு ஆற்றாது மிகவும் வருந்துகின் றாள். அவளது மேனியும் பசந்து மெலிவடைகின்றது. அவளோ அப்பிரானது திருத்துழாய் மாலையைச் சூடுவது, அப்பிரான் எழுந்தருளியிருக்கும் தலங்களின் பெருமையைச் சொல்லி மகிழ்வது முதலிய செயல்களால் ஒருவாறு ஆற்றியிருக்க முயல்கின்றாள். தன் மகளிடம் இல் வேறுபாடுகளையும் வாய்வெருவுதலையும் காணும் செவிலித் தாய், மிக்க இளம் பருவத்தாளாய இவளுக்குப் பருவம் நிரம்பியவர்க்கு வரக்கடவதான தன்மை நேர்ந்தது என்னோ!' என்று இரங்கிக் கூறுவதாக அமைந்தது இப் பாசுரம். பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளை' என்றாற் போல வேட்கை பிறவாப் பருவமே தொடங்கி இவள் வேட்கை விஞ்சினள் என்கின்றாள் செவிலி. நமக்கும் எம்பெருமான் மீது காதல் ஏற்பட்டு விட்டதான பாவனை யுடன் அவனை வணங்கி விடை பெறுகின்றோம், அர்த்த மண்டபத்தை விட்டு வெளிவந்து பிராகா ரத்தை வலம் வருகின்றோம். இங்ங்ணம் வலம் வருங்கான், 9. நூற் திருப் அந்-53 பாதி-14