பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவைகுந்தத்துத் தேவன் 31}. சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தாலும் அவர் தரும் விளக்கம் நம்மைச் சுவையின் கொடு முடிவில்கொண்டு செலுத்தும். இந்தத் திவ்விய தேசத்தில் ஆறு கல்வெட்டுகள் இருப்பதையும் தெரிந்துகொள்ளுகின்றோம். ஒரு கல் வெட்டு தேவர்.பிரான்தாதருக்குக் கேரனேரி மேல் கொண்டான் வல்லநாட்டில் ஐந்து மா அளவு நிவம் மடைப்புற இறையிலியாகக் கொடுத்ததைக் குறிக்கின்றது. மற்றொரு கல்வெட்டால் வைகுந்தவல்லித் தாயாரைப் பிரதிட்டை ப ன்ை னி ய வ ர் திருவரங்கப்பெருமான் பல்லவராயர் என்று அறிகின்றோம். சடாவர்மன் குலசேகரர், கோனாடு கொண்ட சுந்தர பாண்டியத் தேவர் முதலியோர் செய்த திருப்பணி விவரங்களும் இக் கல்வெட்டு களால் அறியக் கிடக்கின்றன. வடநாடு வரைச் சென்று சைவ சமயத்தை நிலை நாட்டி அமிழ்தினுமினிய அருந் தமிழைப் பரப்பிய குமரகுருபர அடிகள் பிறந்திருளியதும் இத்திருத்தலத்தில்தான், இப்பெரியார் பெயரால் திருப் பனந்தாள் காசி மடத்தின் பேருதவியால் நீண்ட நாட் களாக ஒர் உயர்நிலைப் பள்ளி தடைபெற்று வருகின்றது. சில ஆண்டுகட்கு முன்னர் இவர் பெயராலேயே அத் திருமடத்தின் உதவியால் ஒரு கலைக் கல்ஜாரியும் தொடங்கப்பெற்று நன்முறையில் இயங்கி வருகின்றது. இச்செய்திகளை அறிந்த வண்ணம் வரகுணமங்கை என்னும் திவ்விய தேசத்திற்குப் பயணமாகின்றோம்.