பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வரகுணமங்கை விசயாசனர் இருள் தருமா இவ்வுலகில் தோன்றிய மக்களுக்கு இன்பம் உண்டாவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. மெய், வாய், கண், செவி, மூக்கு ஆகிய ஐம்பொறி களால் அறிதற்குரிய பொருள்களை அநுபவிக்கும் பொழுது உள்ளத்தில் இன்ப உணர்ச்சி உண்டாகும். தமக்கு இனிய உறவினரை, நண்பர்களை, இனிய காட்சி களைக் கண்ணாற் காணும்போது உள்ளத்தில் இன்பம் உண்டாகும்; தம் மக்களின் மழலைச் சொற்கள், இனிய இசை முதலியவற்றைக் காதினால் கேட்கும்பொழுதும் உள்ளத்தில் இன்பம் தோன்றும். இவ்வாறே பிற பொறி கட்கும் எடுத்துக்காட்டுகள் தரலாம். இங்கனம் ஐம்பொறிகளின் தொடர்பால் இன்பம் உண்டாவதன்றி இவற்றின் தொடர்பின்றியே உள்ளத் தில் இன்பம் உண்டாதலும் உண்டு, அதுவே மிகவும் உயர்ந்த இன்பம், துன்பமான செயலை அநுபவித்துக் கோண்டே மனத்தில் இன்பம் உறுதலும் உண்டு. நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தேச பக்தர்கள் சிறைச்சாலையையே தவச் சாலையாக மகிழ்ச்சியுடன் ஏற்ற செயலை இதற்கு எடுத்துக்காட்டாக கொள்ள லாம். நம்மாழ்வாருக்கு எம்பெருமானை நினைக்க நினைக்க அவர் உள்ளத்தெழுந்த இன்பம் உடல்தொடர் பில்லாதது; அஃது உயிரை ஒட்டிய இன்பமாகும். ஐம்பொறி இன்பமாயின் அவ்வப் பொறிகளால் அநு.