பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரகுணமங்கை விசயாசனர் 21 3 பவித்தற்கு உரிய பொருள்கள் இல்லாதபொழுது இன்பம் உண்டாகாது. ஆழ்வார் எம்பெருமானை ஊனக் கண்ணாற் கண்டிலர்; நினைந்து நினைந்தே இன்புற் றனர்; ஞானக் கண்ணாற்கண்டு இன்புற்றனர். அதனால் அவருடைய இன்பம் தடையின்றி நிகழ்ந்தது. உலகப் பொருள்களில் இன்பம் தரத்தக்க பல்வேறு பொருள்களால் உண்டாகும் இன்பம் எல்லாம் ஒன்று சேர்ந்தாற்போல் எம்பெருமானை நினைத்தலால், ஆழ் வார் உள்ளத் தில் இன்பம் உண்டாயிற்று. அத்தகைய அவர் நிலைமையை அவர் பாசுரங்களில் கண்டு தெளிய ←} }ᎢᏓᏝᏱ . 'தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகித் தித்திப்ப, யானும் எம்பி ரானையே ஏத்தி னேன்யான் உய்வானே.” (கன்னல்-சருக்கரை) என்ற பாசுரப் பகுதியில் தேன், பால் சருக்கரை, அமுதம் ஆகிய எல்லாவற்றின் இன்பமும் எம்பெருமானை நினைதலால் தனக்கு உண்டாவதாகக் கூறுகின்றார் ஆழ்வார். அப்படி இன்பம் உண்டாவதால்தான். தான் எப்பொழுதும் எம்பெருமானை ஏத்துவதாகச் செப்பு கின்றார். அப்படி எம்பெருமானை நினைந்து ஏத்தி இன்பம் அடைவதால்தான் தான் உயிர் வாழ்ந்திருப்பதாகவும் மொழிகின்றார். அப்படி இல்லாவிடில் தான் உயிர் வாழ்தல் இயலாது என்றும் அறுதியிட்டு உரைக் கின்றார். யான் உய்வான் ஏத்தினேன்' என்ற தொடர் இதனைக் காட்டுகின்றது. உய்தல் என்பது இங்கு நற்கதி யடைதலாகும்; உயிர் பிழைத்திருத்தல் என்பது பொருள். உண்ணும் சோறும் பருகும் நீரும் ’’م - مس-بیw مساسبت -- یہ 1. திருவாய் 4.3.10