பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. திருக்குளந்தை மாயக்கூத்தன் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் ‘தீது அவம் கெடுக்கும் அமுதம்' என்று ஒரு பாசுரத்தில் சிறப்பித்துப் பேசியுள்ளார். இத்தொடரிலுள்ள தீது', 'அவம்’ என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளைக் கொண்டவை. அப்படியிருக்க இங்கு இரண்டு சொற்களைக் கொண்டு ஒரே பொருளைக் குறிப்பது ஒரு சிறந்த கருத் தினை விளக்குதற் பொருட்டாகும். சஞ்சிதம், ஆகாமியம் என்ற இருவகை வினைகளையும் இறைவன், இருவகைப் பற்றும் அற்று மெய்யுணர்வு பெற்ற பெரியோர்களிடமிருந்து போக்கிவிடுகின்றான் என்பதை உணர்த்தற்பொருட்டே இங்ங்னம் கூறியுள்ளார் என்பது ஈண்டு அறியத்தக்கது. அன்றியும், கழுவாய் (பிராயச்சித்தம்) இல்லாத வினை களும் கழுவாய் உள்ள வினைகளுமாகிய இருவகை வினை களையும் குறிப்பதற்காகவே இங்ங்ணம் தீது’, ‘அவம்’ என்று இரு சொற்கள் பெய்து கூறினர் என்றும் கொள்ள லாம். உடலுக்கு ஏற்படும் பிணிகளைப் போக்கும் மருந்து களில் உண்பதற்கு இனிமை இல்லனவும் உண்டு; உண்பதற்கு இனிமை உடையனவும் உண்டு. பால் ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுதலின் அது பாலமிழ்தம்' என்ற பெயராலும்வழங்கப்பெறுகின்றது. பால் பருகுவதற்கு இனிமையுடையதாயும் சில நோய்களைப் போக்குவதாகவும் 1. திருவாய் 2.7:3