பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குளந்தை மாயக்கூத்தன் 2盛 மாடக் கொடிமதிள் தென்கு ளத்தை வண்குட பால்கின்ற மாயக் கூத்தன் ஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழி வலவனை ஆதரித்தே.' (கோல்வளை அழகிய வளை; பாடு அற்று-மீதியில்லா மல் நீங்கி; வைகல்-நெடுங்காலமாகவே; குடபால்-மேற்குப் பக்கம், பறவை-கருடன்; ஆழிவலவன்-சக்கரத்தை வலக் கையில் உடையவன்.) என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்தை மிடற்றொலி கொண்டு ஒதுகின்றோம். இது மகள் பாசுர மாகச் செல்லுகின்றது. நாமும் நாயகி நிலையை அடைய முயன்று ஓதி உளங்கரைகின்றோம். எம்பெருமானுடன் கலந்து பிரிகின்றாள் ஒருபிராட்டி. அவன் மறுபடியும் தன்னிடம் வரும் வரையில் அவளால் பொறுத்திருக்க முடியவில்லை. ஆகவே, தானே அவன் இருக்கும் இடத்தை நோக்கிப் புறப்படுகின்றாள். இது கண்ட தோழிமார் முதலானோர் படி கடந்து இங்கனம் அவள் புறப்படுவது அவள் நிலைக்கு ஆகாது என்று அறிவுரை பகன்று அவளை நிறுத்தப் பார்க்கின்றனர். அவளோ தனக்கு எம்பெருமான் விஷயமொன்று தவிர மற்று எதிலும் நசை இல்லாமையைச் சொல்லி அவர்கள் அறிவுரைக்குத் தன்னால் இனங்க முடியாமையைச் சொல்லுவதாகஅமைந்தது இப் பாசுரம். இதில் நம்மாழ்வார் நாயகி சமாதியில் நின்று பேசுகின்றார். இத் திருத்தலத்தை இவர் மட்டிலுமே இந்த ஒரே பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். மோயக்கூத்தன்' என்ற எம்பெருமானின் திருநாமம் நம்மைப் பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கின்றது. ஒரு நோக்கில் ஒரு குருவி பிணைத்த பிணை போலே மாயப்பிணையொன்று பிணைத்து அதிலே எல்லோரையும் T3. திருவாய் 8, 2 : 4