பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குளந்தை மாயக்கூத்தன் 22 i நெஞ்சினாலும் நினைக்க வொண்ணாத இத் திருக்கூத்தில் உள்ளத்தைப் பறிகொடுக்கின்றோம். இன்னும் ஒரு நோக்கில் ஆழ்வார் பெருமக்கள் அவனது ஆச்சரியமான செயல்களில் பறிகொடுத்துப் பாசுரங்கள் இட்டருளியதை எண்ணி எண்ணிக் களிக் கின்றோம். வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்டல் புண்ணில் புளிப் பெய்தாம் ஒக்கும் தீமைகளை மனை தோறும் செய்தல், உருகவைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி உடைந்திட்டுப்போந்து அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்தல்' இல்லம் புகுந்து ஒரு மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு தொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து நல்லன நாவற்பழம் கொண்டு நானல்லேன் என்று சிரித்தல்' ஆற்றிலிருந்து விளையாடுவோர்களைக் சேற்றால் எறிந்து வளை துகில் கைக்கொண்டு காற்றிற் கடியனாய் ஓடி அகம் புகுதல்' 'வண்டமர் பூங்குழலார் துகில் கைக்கொண்டு விண்தோய் மரத்தேறுதல்' :மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்குக் கச் சொடுபட்டைக் கிழித்துக் காம்பு துகில் அவை கீறி நிச்சலும் தீமைகள் செய்தல்' சீமாலிகன் தன்னொடு தோழமை கொண்டு சாமாறு அவனை எண்ணிச் சக்கரத் தால் தலை கொள்ளல்' 'தேனுகன் ஆவி செகுத்து வானவர்கோன் விட்ட மழைதடுத்து ஆநிரை காத்தல்' தடம்படு தாமரைப் பொய்கை கலங்கி விடம்படு நாகத்தை 5. பெரியாழ். திரு. 2. 9 : 1. 8. ஷ்ை. 2. 9 : 10 6. స్కో. 2. సీ : 1 9. ഒു. 2. 10 : 1 7. 64. 2. 9 : 3 10. ഒു. 2, 10 : 2 11. ഒു. 2. ? : 8 12. ഒു. 2. " : 8 13, ഒു. 2, 10 : 4