பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குளந்தை மாயக்கூத்தன் 223 மாமலையின் மருப்பினைக் குவடு இறுத்து உருட்டி ஊர்கொள் தின்பாகன் உயிர் செ குத்து அரங்கின் மல்லரைக் கொன்று போர் கொடா அரசர் புறக்கிட மாடமாமிசைக் கஞ்சனைத் தகர்த்தல்' பற்றலர்iயக் கோயில் கையில் கொண்டு மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தன் சிலை வளையத் திண்தேர் மேல் முன்னிற்றல், பாழியால் மிக்க பார்த்தனுக்கருளிப் பகலவன் ஒளிகெடப் பகலே ஆழியால் அன்றங்கு ஆழியை மறைத்தல் போன்ற ஆழ்வார்கள் அநுசந்தித்த மாயக்கூத்துகள் பலவற்றையும் நாம் இப்பொழுது அநுசந்தித்து உடல் புளகாங்கிதம் அடைகின்றோம். அந்த மாயக்கூத்துகள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாக நம் மனத்திரையில் எழுகின்றன. இந்நிலையில் ஆசாரிய ஹிருதயத்தின்,

சாதரரைப் பரிசளிக்கும் சேஷ் டிதாச்சரியம்,

குளத்தே கொடி விடும்',' (சாதரர்-அன்பினையுடையவர்கள்; சேஷ்டிதம்-செயல்; குளம்-திருக்குளந்தை; கொடிவிடும்-மிக்குத்தோன்றும்; என்ற சூத்திரமும் நம் மனத்தில் குமிழியிடுகின்றது. பெண்களுக்குரிய நாணம் முதலியவற்றை அழிக்கும் மாயக்கூத்தன் என்கின்ற சேஷ்டிதாச்சரியம் இத்திருப் பதியில் விளங்கும் என்பது இதன் கருத்து. மேற்குறிப் பிட்ட எம்பெருமானின் சேஷ்டிதங்கள் யாவும் இத் திருத்தலத்தில் மிக்குத்தோன்றுவதாக நாமும் கருது கின்றோம். திருத்தலங்களையெல்லாம் அடைவுபடுத்தி வைணவ சம்பிரதாயத்திற்கு ஒரு நிலையான வடிவம் தந்தருளிய திவ்விய கவியின் பாசுரத்தையும் சிந்திக்கின்றோம். 28. ஆசா. ஹிரு. 172