பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் என்ற பாசுரத்தை மிடற்றொலி கொண்டு ஒதுகின்றோம். 'எம்பெருமான் இப்படித் திருக்கண் வளர்வது நம் போன்ற நிலவுலகத்தவர்கட்காக அன்றோ? அதனை அறிந்து அவர்கள் பரிந்து ஈடுபடவேண்டும். அங்ங்னம் ஈடுபடக் காணாமையால் எம்பெருமான் இக்கிடையைவிட்டு எழுந்து போக வேண்டியதே அவன் மேற் கொள்ள வேண்டிய செய்கை. அப்படி எழுந்து போகாமல் இருப்பது என்றேனும் ஒருநாள் யாரேனும் ஒருவர் பரியக்கூடும் என்றே கிடக்கின்றான்” என்று ஆழ்வார் கருதுகினற. படியே நாமும் எண்ணுகின்றோம். இங்ங்னம் கூறியது கிடந்த திருக்கோலத்தில் பிற தலங்களில் சேவை சாதிக்கும் எல்லா எம்பெருமான்களுக்கும் ஒக்கும்; உபலட்சணம். இவ்விடத்தில் திருக்குடந்தை ஆராவமுதனை வினவும். திருமழிசையாழ்வாரின் பாசுரத்தையும் அநுசந்திக் கின்றோம். -

கடக்தகால்கள் கொந்தவோ?

கடுங்களுால மேனமாய், இடங்தமெய் குலுங்கவோ? விலங்குமால் வரைச்சுரம், கடக்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள் கிடக்தவா றெழுந்திருக்து பேசுவாழி கேசனே!??* (தொந்தல்-வலித்தல், ஞாலம்-பூமிப்பிராட்டி; ஏனம்வராகம்; இடந்த-நோண்டித்துாக்கின; மெய்-திருமேனி) என்பது பாசுரம்: அடுத்து, இத்தலத்து எம்பெருமான்மீது ஆழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரங்கள் ஒன்றன்பின், ஒன்றாய் நம் மனத்தில் எழுகின்றன. * - - - 姓, திருச்சந் 6 :