பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோட்டியூர் எந்தை o அதிதிகட்கு உணவளித் துப் புகழை ஈட்டிக் கொள்பவர்கள். இவர்களை, 'காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு தேச வார்த்தை படைக்கும் வண்கையி னார்கள்' (காசின் வாய்-ஒரு காசுக்கு; கரம்-ஒரு பிடிநெல்; கரவாது-மறைக்காமல்; மாறு இலி-பிரதி பயனை எதிர்பாராது; தேச வார்த்தை - புகழ் சொல்; வண்கை-வள்ளண்மை; என்று பாராட்டிப் பேசி மகிழ்வர் ஆழ்வரர். வேறு இடங் களில் இவர்களை ஏதமொன்றும் இவாத வண்கையி னார்கள்' என்றும், செற்றமொன்றும் இலாத கையி னார்கள்' என்றும் குறிப்பிடுவதைக் காண்கின்றோம். இங்ங்னம் ஊரையும் ஊரிலுள்ள மக்களையும் சிந்தித்த வண்ணம் திருக்கோயிலை நோக்கி வரு கின்றோம்.கோயிலை நோக்கி நடந்துகொண்டே வருங்கால் நாற்புறமும் நம் கண்ணைச் செலுத்துகின்றோம். கோவிலுக்கு முன்புறம் இருப்பது திருப்பாற்கடல்'; அதன் வடகிழக்கில் நடுமண்டபத்துடன் கூடிய தெப்பக்குளம் நம் கண்ணில் படுகின்றது. கோயிலின் மேற்கே ஐயனார் சிவகங்கையும், வடக்கே காவடிக்குளமும் உள்ளன. நெடுந்துாரம் வரை காணக்கூடிய திருக்கோபுரத்துடனும் திரு அட்டாங்க விமானத்துடனும் திருக்கோயில் திகழ் வதைக் காண்கின்றோம். கோயில் பெரிய கோயிலே. இதன் கீழ் மேல் நீளம் 412 அடி; தென்வடல் 270 அடி. கம்பீர மாக நிற்கும் இராசகோபுரத்தின் உயரம் 85 அடி, இதன் 15 பெரியாழ். திரு. 4. 4: 10 16. ஷை 4 4. 6 17. ഒട്ട 4,4;2