பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புளிங்குடிக் காய்சின வேந்தன் 231 என்று திருப்புளிங்குடியானை வேண்டுகிறார். எம் பெருமான் திருவடிகளைத் தன் தலைமேல் வைக்க வேண்டும் என்பது இவரது வேண்டுகோள். அடுத்து எம்பெருமானை நோக்கி ஆழ்வார் இவ்வாறு பேசுகின்றார் : யாரோ ஒர் அன்பர் நின் கிடையழகு காணவேண்டுமென்று ஆசைப்பட்ட தற் கிணங்க நீ கண் வளர்ந்தருளினாய். இனியொருவர் வந்து கிடந்தவாறெழுந்திருந்து பேசு' என்று ஆசைப் பட்டு வேண்டினால் அதற்குப் பிறகும் கிடந்தருள லாமோ? எழுந்திருக்கவேண்டியதன்றோ உன் கடமை? இடம் வலம் கொள்ளாமல் ஒரே பக்கமாக நெடுங்காலம் சயனித்திருந்தால் சாலவும் சிரமமாக இராதோ? அழகு மிக்க திருமேனிக்கு இது தகுமோ?’ என்று கேட்டார். இவர் வேண்டுகோள் :நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும், இடங்கொள் மூவுலகுந் தொழ இருந்தருளாய்' என் பது. அதாவது, நீ தடங்கொள்தாமரைக்கண் விழிக்க வேணும்; எழுந்திருக்க வேணும்;கைங்கரியம் பெறுவதற்குத் தாமரை மங்கையோடு இருக்கவேணும்; என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றியருளும்காரணமாக மூவுலகும் தொழ வீற்றிருக்கவேணும் என்ற ஆழ்வாரின் பாரிப்பை இத்தொடரில் காண்கின்றோம். இந்த மூன்று பாசுரங்களையும் கூர்ந்து நோக்கி ஆராயின் இத் திருவாய்மொழியில் சிறப்புமிக்க கைங் கரியாருரூபமான ஒரு பிறவி சொல்லப்படுவதை அறியலாம். முதல் பாசுரத்தில் பல் படிகால் குடி குடி வழிவந்தாட் செய்யும் தொண்டர் என்றார்; இரண்டாம் பாசுரத்தில் 'உன் பொன்னடி கடவாதே வழி வருகின்ற அடியர்' என்றார்; மூன்றாம் பாசுரமான இதில் 'தொல்லடிமை வழி வருந்தொண்டர் என்கிறார். இப்படிப்பட்ட மிகச் சிறந்ததான தொண்டக் குலப் பிறவியை வெளியிடும் பதிகமாக இஃது அமைகின்றது. பெரியாழ்வார் திருப் --------------------------سسسسسس-- 7. திருவாய் 9.2:3